இந்திய ரிசர்வ் வங்கி நேஷனல் நகர வங்கி லிமிடெட் பிரதாப்கர், உத்திரப் பிரதேசத்தின் மீது அபராதம் விதிக்கிறது |
ஜூலை 05, 2018.
இந்திய ரிசர்வ் வங்கி நேஷனல் நகர வங்கி லிமிடெட் பிரதாப்கர், உத்திரப் பிரதேசத்தின் மீது அபராதம் விதிக்கிறது.
இந்திய ரிசர்வ் வங்கி நேஷனல் நகர கூட்டுறவு வங்கி லிமிடெட் பிரதாப்கர், உத்திரப் பிரதேசம். மீது ரூ 5,00,000/- ஐந்து லட்சம் பண அபராதத்தை விதித்துள்ளது. வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 ன் (கூட்டுறவுச் சங்களுக்கும் பொருந்தும்) சட்டப் பிரிவு எண் 47 A (1) (C) மற்றும் 46 (4) - ன் படி இந்திய ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்/அறிவுறுத்தல்கள், எக்ஸ்போஷர் நெறிமுறைகள் மற்றும் சட்டபூர்வமான/ பிற கட்டுப்பாடுகள், வாடிக்கையாளர்களை அறிதல், கடன் தகவல் நிறுவனத்திற்கு (CIC) அங்கத்தினர்களை சேர்ப்பது குறித்த வழிமுறைகளை பின்பற்றாததால் மேற்படி அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம் கோரும் அறிவிப்பை வழங்கியது. வங்கி பதிலை எழுத்து மூலமாக அளித்தது. இது குறித்த கருத்தினை பரிசீலனை செய்ததில் வங்கியின் அத்து மீறல்கள் நிருபிக்கப்பட்டு அதற்கு அபராதம் தேவையென இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
அஷிஷ் தர்யானி
உதவி மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு – 2018 – 2019/44 |
|