ஜுலை 06, 2018
ராஜஸ்தானின் ஆல்வார் நகர்ப்புற கூட்டுறவு வங்கி லிமிடெட் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஜ), ஜூலை 03, 2018 தேதியிட்ட உத்தரவின் படி, ஜூலை 05, 2018 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து ராஜஸ்தானின் ஆல்வார் நகர்ப்புற கூட்டுறவு வங்கிப்பணிகளை மேற்கொள்வதற்கான உரிமத்தை ரத்து செய்துள்ளது. ராஜஸ்தானின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரிடம் வங்கியை மூட உத்தரவு பிறப்பிக்கவும், வங்கிக்கு ஒரு லிக்விடேட்டரை நியமிக்கவும் கோரப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி, வங்கியின் உரிமத்தை ரத்து செய்த காரணங்கள்:
i. வங்கிக்கு போதுமான மூலதனம் மற்றும் வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் இல்லை. எனவே, இது வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 இன் பிரிவு 56 உடன் இணைந்த பிரிவு 11 (1) மற்றும் பிரிவு 22 (3) (d) ன் விதிகளை பின்பற்றவில்லை.
ii. வங்கி அதன் தற்போதைய மற்றும் எதிர்கால வைப்புத்தொகையாளர்களுக்கு அவர்களின் கோரும் போது முழுமையாக கொடுக்கக்கூடிய நிலையில் இல்லை. அதன்படி, வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 இன் பிரிவு 56 உடன் இணைந்த பிரிவு 22 (3) (a) ஐ வங்கி பின்பற்றவில்லை.
iii. வங்கியின் வர்த்தகம் அதன் தற்போதைய மற்றும் எதிர்கால வைப்புத்தொகையாளர்களின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நடத்தப்படுகின்றன, இதனால் வங்கி 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் 56 வது பிரிவுடன் சேர்ந்த 22 (3) (b) பிரிவினை பின்பற்றவில்லை.
iv. வங்கியின் தற்போதைய நிதி நிலையை கருத்தில் கொண்டு அதன் வளர்ச்சிக்கு எந்த வாய்ப்பும் இல்லை என்பது தெளிவாகிறது.
v. 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 56 உடன் இனைந்த பிரிவு 22 (3) (e) இல் திட்டமிடப்பட்டுள்ளபடி வங்கியைத் தொடர அனுமதிப்பதன் மூலம் எந்தவொரு பயனுள்ள நோக்கமும் ஏற்படாது. மாறாக, வங்கி வர்த்தகத்தை நடத்துவதற்கு அனுமதித்தால் பொது நலன் மேலும் மோசமாக பாதிக்கப்படும்.
அதன் உரிமத்தை ரத்து செய்ததன் விளைவாக, ராஜாஸ்தானின் ஆழ்வார் நகர்ப்புற கூட்டுறவு வங்கி லிமிடெட், ‘வங்கி’ வணிகத்தை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, இதில் பிரிவு 5 (b) இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி வைப்புத்தொகையை ஏற்றுக்கொள்வது மற்றும் வைப்புத்தொகையை திருப்பிச் செலுத்துதல் ஆகியவை அடங்கும். 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 56 உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.
உரிமம் ரத்துசெய்யப்பட்டு, கலைப்பு நடவடிக்கைகள் தொடங்கப்படுவதால், DICGC சட்டம், 1961 இன் படி, ராஜஸ்தானின் ஆல்வார் நகர கூட்டுறவு வங்கி லிமிடெட், ஆல்வார் நகர்ப்புற கூட்டுறவு வங்கி லிமிடெட் டெபாசிட்டர்களுக்கு பணம் செலுத்தும் செயல்முறை தொடங்கப்படும். கலைக்கப்படும் போது, ஒவ்வொரு வைப்புத்தொகையாளரும் வழக்கமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி வைப்பு காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகத்திலிருந்து (டிஐசிஜிசி) (DICGC) இருந்து 1, 00,000/- (ஒரு லட்சம் ரூபாய் மட்டும்) பண உச்சவரம்பு வரை அவன் / அவள் களின் வைப்புகளை திருப்பிப் பெற தகுதியுடையவர்கள்.
அஜித் பிரசாத்
உதவி ஆலோசகர்
செய்தி வெளியீடு: 2018-2019/69 |