இந்திய ரிசர்வ் வங்கி, தெலுங்கானாவின் ஜாக்ருதி கூட்டுறவு நகர வங்கி- ஹைதராபாத் மீது அபராதம் விதிக்கிறது |
ஜுலை 09, 2018
இந்திய ரிசர்வ் வங்கி, தெலுங்கானாவின் ஜாக்ருதி கூட்டுறவு நகர வங்கி- ஹைதராபாத் மீது அபராதம் விதிக்கிறது.
இந்திய ரிசர்வ் வங்கி, ஜாக்ருதி கூட்டுறவு நகர வங்கி லிமிடெட், ஹைதராபாத், தெலுங்கானாவுக்கு 25,000/- (ரூபாய் இருபத்தைந்தாயிரம் மட்டும்) பண அபராதத்தை விதிக்கிறது. வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் (AACS கூட்டுறவுச் சங்கங்களுக்கும் பொருந்தும்) சட்டப் பிரிவு எண் 47 A(1) (b) மற்றும் 46 (4) உடன் இணைந்த கருத்தின் படி ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்கள்/ UCBS – குழுவில் உள்ள இயக்குநர்களின் வழிகாட்டுதல்களை மீறியதற்காகவும் இந்த அபராதத்தை விதிக்கிறது.
வங்கிக்கு, இந்திய ரிசர்வ் வங்கி ஒரு காரண அறிவிப்பை வெளியிட்டது. அதற்கு பதிலளிக்கும் விதமாக வங்கி எழுத்து பூர்வ பதிலை சமர்ப்பித்தது. இந்த விஷயத்தில் வங்கியின் விதிமீறல்கள் குறித்த குற்றச்சாட்டு நிருபணமானது என்று முடிவு செய்து அபராதம் விதிப்பதற்கான தேவையை RBI உறுதி செய்துள்ளது.
அஜித் பிரசாத்
உதவி ஆலோசகர்
செய்தி வெளியீடு: 2018 – 2019/80 |
|