ஜூலை 16, 2018
நவோதயா அர்பன் கோஆபரேடிவ் வங்கி லிமிடெட், நாக்பூர், மகாராஷ்டிராவிற்கு
ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட வழி காட்டுதல்கள் அக்டோபர் 15, 2018 வரை
மேலும் நீட்டிக்கப்பட்டன
நவோதயா அர்பன் கோஆபரேடிவ் வங்கி லிமிடெட், நாக்பூருக்கு முன்னதாக ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட வழி காட்டுதல்கள் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வழி காட்டுதல்கள், மறு ஆய்வுக்கு உட்பட்டு தற்போது அக்டோபர் 15, 2018 வரை செல்லுபடியாகும்.
வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (AACS) இன் பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) இன் கீழ் ரிசர்வ் வங்கியில் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் வழி காட்டுதல்கள் விதிக்கப்பட்டன. இந்த உத்தரவின் நகல் வங்கியின் வளாகத்தில் ஆர்வமுள்ள பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்படும்.
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை வெளியிடுவதால் ரிசர்வ் வங்கி, வங்கியின் உரிமத்தை ரத்து செய்வதாகக் கருதக்கூடாது. வங்கி அதன் நிதி நிலை மேம்படும் வரை வர்த்தகத்தைக் கட்டுப்பாடுகளுடன் தொடரும். சூழ்நிலைகளைப் பொறுத்து இந்த உத்தரவுகளில் மாற்றங்களை கொண்டு வர ரிசர்வ் வங்கி கருதலாம்.
அஜித் பிரசாத்
உதவி ஆலோசகர்
செய்தி வெளியீடு : 2018-2019/142 |