தேதி: ஆகஸ்டு 07, 2018
நேஷனல் அர்பன் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட் பஹ்ரைச், உத்தரபிரதேசம்- அபராதம் விதிக்கப்பட்டது
உத்தரபிரதேசத்தின் நேஷனல் அர்பன் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், பஹ்ரைச்மீது இந்திய ரிசர்வ் வங்கி 2,50,000/- (ரூபாய் இரண்டு லட்சம் மற்றும் ஐம்பாதாயிரம் மட்டும்) அபராதம் விதித்துள்ளது. பிரிவு 47 A (1) C வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 இன் பிரிவு 46 (4) உடன் இணைந்த கருத்தின் படி (கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தும் வகையில்), எச்.டி.எம்/ஏ.எஃப்.எஸ்/எச்.எஃப்.டி முதலீடுகளை வகைப்படுத்துவதற்கான ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்கள் / வழிகாட்டுதல்களை மீறியதற்காகவும், கன்கரன்ட் தணிக்கை, வங்கிகளுக்கு இடையேயான எக்ஸ்போஷர் மற்றும் கவுண்டர் பார்டி வரம்புக்கான ப்ருடன்ஷியல் விதிமுறை மீறல் மற்றும் வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ளுங்கள் (KYC) விதிமுறை மீறல்களுக்காக இவ்வபராதம் விதிக்கப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிக்கு விளக்கம் கேட்டு அறிவிப்பை அனுப்பியது. அதற்கு பதிலளிக்கும் விதமாக வங்கி எழுத்துப்பூர்வ பதிலை சமர்ப்பித்தது. வழக்கின் உண்மைகளை பரிசீலித்த பின்னர், மீறல்கள் நிரூபிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு ரிசர்வ் வங்கி வந்தது.
அஜித் பிரசாத்
உதவி ஆலோசகர்
செய்தி வெளியீடு: 2018-2019/339 |