செப்டம்பர் 07, 2018
பாங்க் ஆப் மகராஷ்டிராவிற்கு இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ப்ராட்ஸ் – கிளாசிவிகேஷன் மற்றும் ரிபோர்டிங் குறித்த முதன்மைச் சுற்றறிக்கையில் உள்ள அறிவுறுத்தல்களை மீறியதற்காக, ரிசர்வ் வங்கி (RBI) ஆகஸ்ட் 30, 2018 அன்று பாங்க் ஆப் மகராஷ்டிராவிற்கு (வங்கி) ₹ 10 மில்லியன் அபராதம் விதிக்கிறது. 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 46 (4) (i) உடன் பிரிவு 47 A (1) © விதிகளின் இணைந்த கருத்துக்களின் கீழ் ரிசர்வ் வங்கியில் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி ஒரு கணக்கில் ஏற்பட்ட மோசடியைத் தாமதமாகக் கண்டறிந்து தெரியப்படுத்தியதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அநிருத்தா D ஜாதவ் உதவி மேலாளர்
செய்தி வெளியீடு : 2018-2019/584
I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்