ஹரிஹரேஷ்வர் சஹகாரி வங்கி லிமிடெட், வாய், சதாரா, மகாராஷ்டிராவுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதிக்கிறது |
தேதி: ஜனவரி 04, 2019
ஹரிஹரேஷ்வர் சஹகாரி வங்கி லிமிடெட், வாய், சதாரா, மகாராஷ்டிராவுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதிக்கிறது.
இயக்குநர் தொடர்பான கடன்கள் சம்பந்தமாகஇந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்கள்/ வழிகாட்டுதல்களை மீறியதற்காக, வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தும்) பிரிவு 46 (4) உடன் இணைந்த பிரிவு 47 ஏ (1) (பி) விதிகளின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்திஇந்திய ரிசர்வ் வங்கி ஹரிஹரேஷ்வர் சஹகாரி வங்கி லிமிடெட், வாய், சதாராவுக்கு 5.00 லட்சம் (ரூபாய் ஐந்து லட்சம் மட்டும்) பண அபராதம் விதித்துள்ளது.
இந்திய ரிசர்வ்வங்கி, வங்கிக்கு ஒரு காரண அறிவிப்பை வெளியிட்டது. அதற்கு பதிலளிக்கும் விதமாக வங்கி எழுத்துப்பூர்வ பதிலை சமர்ப்பித்தது. வழக்கின் உண்மைகளையும், இந்த விவகாரத்தில் வங்கியின் பதிலையும் பரிசீலித்த பின்னர், ரிசர்வ் வங்கிமீறல்கள் நிரூபிக்கப்பட்டன என்ற முடிவுக்கு வந்து அபராதம் விதிக்க வேண்டியது அவசியமாகிறது.
அஜித் பிரசாத்
உதவி ஆலோசகர்
செய்தி வெளியீடு: 2018-2019/1559 | |