தேதி: ஜனவரி 25, 2019
அர்பன் கோ ஆபரேடிவ் வங்கி லிமிடெட், சீதாபூர் (யு.பி.) – மீது அபராதம்
விதிக்கப்பட்டது
உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள் (கே.ஒய்.சி) வழிகாட்டுதல்கள் 2016, கூட்டுறவு வங்கிகளால் கடன் தகவல் நிறுவனங்களின் (சி.ஐ.சி) உறுப்பினர் மற்றும் யு.சி.பி.க்களின் வருமான அங்கீகாரம், சொத்து வகைப்பாடு, வழங்கல் மற்றும் பிற தொடர்புடைய விஷயங்கள் முதன்மை (நகர்ப்புற) கூட்டுறவு வங்கிகளின் முதலீடு குறித்த ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்கள் / வழிகாட்டுதல்களை மீறியதற்காக, வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும் வகையில்) பிரிவு 47 A (விதிகள்) ளுடன் இணைந்த பிரிவு 46 (4) ன் கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி, அர்பன் கோ ஆபரேடிவ் வங்கி லிமிடெட், சீதாபூர் (உ.பி.) மீது, ஐந்து 5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சம் மட்டும்) பண அபராதம் விதித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிக்கு விளக்கம் கோரும் அறிவிப்பு அனுப்பியிருந்தது, அதற்கு பதிலளிக்கும் விதமாக வங்கி எழுத்துப்பூர்வ பதிலை சமர்ப்பித்தது. நிகழ்வின் உண்மைகளை பரிசீலித்த பின்னர், இந்திய ரிசர்வ் வங்கி மீறல்கள் நிரூபிக்கப்பட்டன என்றும் அபராதம் விதிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது.
ஷைலஜா சிங்
உதவிப் பொது மேலாளர்
செய்தி வெளியீடு: 2018-2019/1751 |