தேதி: பிப்ரவரி 04, 2019
கிசான் கிரெடிட் கார்டு (கே.சி.சி) திட்டம்: கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்திற்கான செயல்பாட்டு மூலதனம்
கிசான் கிரெடிட் கார்டு திட்டம் குறுகிய கால பயிர் கடன்களுக்காக விவசாயிகளுக்கு எளிதாக மாற்றக்கூடிய மற்றும் எளிமையான நடைமுறைகளுடன் ஒரே சாளரத்தின் கீழ் வங்கி அமைப்பிலிருந்து போதுமான மற்றும் சரியான நேரத்தில் கடன் ஆதரவை/உதவியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு செயல்பாட்டு எளிதாக மாற்றக்கூடிய தன்மையை விரிவுபடுத்துவதற்காக, 2018-19 வரவுசெலவுத் திட்டத்தில் இந்த விவசாயிகளுக்கு கே.சி.சி.யின் வசதிகளை விரிவுபடுத்துவதற்கான முடிவை இந்திய அரசு அறிவித்தது.
இந்த விஷயம் ஆராயப்பட்டு, அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்தாலோசித்து, கிசான் கிரெடிட் கார்டின் (கே.சி.சி) வசதிகளை கால்நடை பராமரிப்பு விவசாயிகள் மற்றும் மீன்வளத்துறைக்கு விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனிருதா டி.ஜாதவ் உதவி மேலாளர்
செய்தி வெளியீடு: 2018-2019/1839
I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்