தேதி: பிப்ரவரி 21, 2019
ஸ்ரீ காளஹஸ்தி கோ ஆபரேடிவ் டவுன் பேங்க் லிமிடெட், ஸ்ரீகாளஹஸ்தி, ஆந்திரா
மீது அபராதம் விதிக்கப்பட்டது
இந்திய ரிசர்வ் வங்கி 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் 47 A (1) (c) இன் பிரிவு 46 இன் துணைப்பிரிவு 4 உடன் இணைந்த விதிமுறைகளின் கீழ் (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தக்கூடியது), உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இணக்க அறிக்கை சமர்ப்பிப்பது குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் /அறிவுறுத்தல்கள் உத்தரவுகளை மீறியதற்காக, ஸ்ரீ காளஹஸ்தி கோ- ஆபரேட்டிவ் டவுன் பேங்க் லிமிடெட், ஸ்ரீகாளஹஸ்தி, ஆந்திரா மீது ரூ. 50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) அபராதம் விதித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிக்கு ஒரு காரண அறிவிப்பை வெளியிட்டது, அதற்கு பதிலளிக்கும் விதமாக வங்கி எழுத்துப்பூர்வ பதிலை சமர்ப்பித்தது. நிகழ்வின் உண்மைகளையும், இந்த விஷயத்தில் வங்கியின் பதிலையும் பரிசீலித்தபின், இந்திய ரிசர்வ் வங்கி மீறல்கள் நிரூபிக்கப்பட்டன என்றும் அபராதம் விதிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது.
அஜித் பிரசாத்
உதவி ஆலோசகர்
செய்தி வெளியீடு: 2018-2019/1998 |