தேதி: மே 10, 2019
கேரளாவின் அடூர் கோ ஆபரேடிவ் பாங்க் லிமிடெட், அடூர், நிறுவனத்திற்கு
வழங்கப்பட்ட வழிகாட்டு உத்தரவுகளை ரிசர்வ் வங்கி மேலும் 6 மாதங்களுக்கு
நீட்டிக்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி அடூர் கோ ஆபரேடிவ் பாங்க் லிமிடெட், அடூருக்கு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 இன் பிரிவு 35 A உடன் இணைந்த பிரிவு 56ன் கீழ் , நவம்பர் 02, 2018 தேதியிட்ட மே 09, 2019 வரை செல்லுபடியாகும் உத்தரவுகளை வெளியிட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவுகளின்படி, மொத்த நிலுவையில் ரூ. 2,000/- க்கும் மிகாத தொகையை (ரூபாய் இரண்டாயிரம் ஆயிரம் மட்டும்), இது எந்தக் கணக்கில் இருந்தாலும், அதாவது சேமிப்புக் கணக்கு அல்லது நடப்புக் கணக்கு அல்லது எந்தப் பெயரில் அழைக்கப்படும் ஒரு டெபாசிட்டாக இருந்தாலும் மேலே குறிப்பிட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு உத்தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டளைகளுக்கு உட்பட்டு, டெபாசிட் வைத்திருப்பவர் திரும்ப எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அடூர் கோ ஆபரேடிவ் பாங்க் லிமிடெட், அடூர், இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து எழுத்துப்பூர்வமாக முன் அனுமதியின்றி, நவம்பர் 02, 2018 அன்று வர்த்தகத்தை முடிந்ததிலிருந்து இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளில் குறிப்பிட்டுள்ளபடியன்றி, கடன் மற்றும் முன் தொகைகளை அளிப்பதோ, புதுப்பிப்பதோ, ஏதேனும் முதலீடு செய்வதோ, கடனாக பணத்தைப் பெறுவது மற்றும் புது டெபாசிட்டுகளை ஏற்றுக்கொள்வது, ஏதேனும் பணம் பட்டுவாடா செய்வது, அல்லது பட்டுவாடா செய்ய ஒப்புக்கொள்வது, வேறு பொறுப்புகள் மற்றும் நிர்ப்பந்தங்களுக்காக அல்லது வேறு எதற்காகவோ பணம் செலுத்துதல், நிதிசார் ஒப்பந்தங்கள் / ஏற்பாடுகள் செய்துகொள்ளுதல், வங்கியின் சொத்துக்களில் எதையேனும் விற்றல், மாற்றல் ஏதேனும் மற்றும் இங்கு வழங்கப்பட்ட விதம் தவிர: அல்லது அவை சார்ந்த விவகாரங்களில் ஈடுபடுதல் கூடாது.
பொது நலன் கருதி, அடூர் கோ ஆபரேடிவ் பாங்க் லிமிடெட், அடூருக்கு வழங்கப்பட்ட உத்தரவின் நவம்பர் 02, 2018 தேதியிட்ட செயல்பாட்டு கால அவகாசத்தை ஆறு மாத காலத்திற்கு நீட்டிக்க வேண்டியது அவசியம் என்று இந்திய ரிசர்வ் வங்கி கருதுகிறது. அதன்படி, இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் 56 வது பிரிவுடன் இணைந்த பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) இன் கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, அடூர் கோ ஆபரேடிவ் பாங்க் லிமிடெட்க்கு பிறப்பிக்கப்பட்ட மே 09, 2019 வரை செல்லுபடியாகும், நவம்பர் 02, 2018 தேதியிட்ட உத்தரவு மறு ஆய்வுக்கு உட்பட்டு மே 10, 2019 முதல் நவம்பர் 09, 2019 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு வங்கிக்கு தொடர்ந்து நீட்டிக்கப்படும். வழிகாட்டுதல்களின் கீழ் உள்ள உத்தரவின் பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாறாமல் இருக்கும்.
ஷைலஜா சிங்
துணைப் பொது மேலாளர்
செய்தி வெளியீடு: 2018-2019/2649 |