ஜூன் 07, 2019
கோட்டக் மஹிந்திரா பாங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர் பி ஐ), வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம் 1949 (சட்டம்) இன் 27 (2) மற்றும் 35 A பிரிவுகளின் கீழ் அதன் அதிகாரங்களைப் பயன்படுத்தி இணக்க அறிக்கை சமர்ப்பிப்பது குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் உத்தரவுகளை மீறியதற்காக ஜூன் 06, 2019 தேதியிட்ட உத்தரவின் பேரில், கோட்டக் மஹிந்திரா பாங்க் லிமிடெட் (வங்கி) க்கு ரூ 20 மில்லியன் பண அபராதம் விதித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் 47 A (1) (c) இன் பிரிவு 46 இன் துணைப்பிரிவு 4 உடன் இணைந்த விதிமுறைகளின் கீழ் (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தக்கூடியது), உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இணக்க அறிக்கை சமர்ப்பிப்பது குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் /அறிவுறுத்தல்கள் உத்தரவுகளை மீறியதற்காக, இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் வங்கி அதன் வாடிக்கையாளர்களுடன் கையெழுத்திட்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை பாதிக்கும் நோக்கத்தில் இல்லை.
பின்னணி:
அதன் முதலீட்டாளர்கள்/நிறுவனதாரரகள் வைத்திருக்கும் பங்குகளின் விவரங்கள் பற்றிய தகவல்களை வழங்கவும், முதலீட்டாளர்கள்/நிறுவனதாரரகள் பங்குகளை குறைப்பதற்கு அனுமதிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு இணங்க வங்கியின் முன்மொழியப்பட்ட நடவடிக்கை / திட்டங்கள் / நுட்பங்களின் விவரங்களை சமர்ப்பிக்கவும் வங்கி, ரிசர்வ் வங்கியால் அறிவுறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவின்படி பங்குகளை குறைப்பற்கான தனது உறுதிப்பாட்டை தெரிவிக்க வங்கி அறிவுறுத்தப்பட்டது. எவ்வாறாயினும், அந்த வழிமுறைகளுக்கு இணங்க வங்கி தவறிவிட்டது, மேலும் அந்த வழிமுறைகளுக்கு இணங்காததற்காக ஏன் அபராதம் விதிக்கப்படக்கூடாது என்பதற்கான காரணத்தைக் காட்டுமாறு வங்கிக்கு ஒரு அறிவிப்பு (எஸ்.சி.என்) வழங்கப்பட்டது. வங்கியிடமிருந்து பெறப்பட்ட பதில், தனிப்பட்ட விசாரணையின் போது வங்கி அளித்த சமர்ப்பிப்புகள் மற்றும் சமர்ப்பித்த ஆவணங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஆர் பி ஐ வழங்கிய உத்தரவுகளுக்கு இணங்க வங்கி தவறிவிட்டது என்ற முடிவுக்கு வந்து, அபராதம் விதிக்க முடிவு செய்தது.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2018-2019/2896 |