ஜூன் 26, 2019
நேஷனல் அர்பன் கோஆபரேடிவ் பாங்க் லிமிடெட், பஹ்ரைச் (யு.பி.) –அபராதம் விதிக்கப்பட்டது
இந்திய ரிசர்வ் வங்கி,வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்துவது) பிரிவு 46 (4) உடன் இணைந்த பிரிவு 47 A (A) 1) (C) ன் கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி நேஷனல் அர்பன் கோஆபரேடிவ் பாங்க் லிமிடெட், பஹ்ரைச், (உ.பி.) மீது 1,00,000 / - (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்) பண அபராதம் விதித்துள்ளது. ஆர் பி ஐ இன் ஆய்வு அறிக்கைக்கு இணக்க அறிக்கை சமர்ப்பிப்பதில் தாமதம் தொடர்பான ஆர் பி ஐ இன் அறிவுறுத்தல்கள் / வழிகாட்டுதல்களை மீறியதற்காக உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள் (KYC) வழிகாட்டுதல்கள், வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (AACS) இன் பிரிவு 36 (1) இன் கீழ் வழங்கப்பட்ட மேற்பார்வை வழிமுறைகள், கடன் தகவல் நிறுவனங்களின் உறுப்பினர் மற்றும் வங்கிக்கு இடையேயான மொத்த மற்றும் கவுண்டர் பார்ட்டி வரம்புகள் குறித்த விவேக விதிமுறைகள் மீறியதற்காகவும் அந்த அபராதம் விதிக்கப்படுகிறது.
இதன் அடிப்படையில் பண அபராதம் ஏன் விதிக்கக்கூடாது என்பதற்கான காரணத்தைக் காட்டுமாறு வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வழங்கியதற்கு வங்கியும் எழுத்துப்பூர்வமாக பதிலை சமர்ப்பித்தது. சமர்ப்பிப்புகளின் உண்மைகளை பரிசீலித்தபின், மேற்கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன மற்றும் பண அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு இந்திய ரிசர்வ் வங்கி வந்தது.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2018-2019/3046 |