ஜூலை 05, 2019
வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் கீழ்
உத்திரவுகள்- யூத் டெவலப்மெண்ட் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட்,
கோலாப்பூர், மகாராஷ்டிரா
யூத் டெவலப்மெண்ட் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், கோலாப்பூர், மகாராஷ்டிரா, ஜனவரி 04, 2019 தேதியிட்ட வழிகாட்டுதல் உத்திரவுகளின்படி ஆறு மாத காலத்திற்கு, ஜனவரி 05, 2019 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து, ஜூலை 05, 2019 வரை மதிப்பாய்வுக்குட்பட்டு வழிகாட்டுதல் உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.
வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்துவது) சட்டப்பிரிவு எண் 35 (A) (1)-ன் உடன் இணைந்த பிரிவு 56 ன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, பொதுமக்களின் தகவலுக்காக பின்வருமாறு உத்தரவிடுகிறது. மேற்கண்ட வங்கிக்கு வழங்கப்பட்ட ஜூலை 05, 2019 வரை நீட்டிக்கப்பட்ட, ஜனவரி 04, 2019 தேதியிட்ட உத்தரவானது, ஜூலை 02, 2019 தேதியிட்ட உத்தரவின்படி, அதன் செல்லுபடி காலம், மறு ஆய்வுக்கு உட்பட்டு, ஜூலை 06, 2019 முதல் ஜனவரி 05, 2020 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது.
வழிகாட்டுதல் உத்தரவின் கீழ் உள்ள உத்தரவின் மற்ற எல்லா நிபந்தனைகளும் மாறாமல் இருக்கும். மேற்கண்ட நீட்டிப்பை அறிவிக்கும் ஜூலை 02, 2019 தேதியிட்ட உத்தரவின் நகல், பொதுமக்களின் பார்வைக்காக வங்கியின் வளாகத்தில் வைக்கப்படும்.
இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்கூறிய நீட்டிப்பு மற்றும் / அல்லது மாற்றியமைத்தல்களினால் வங்கியின் நிதி நிலைமையில் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி திருப்தி அடைந்துள்ளது என்பதைக் குறிக்காது.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/70 |