ஆகஸ்ட் 16, 2019
வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 இன் பிரிவு 56 உடன் இணைந்த பிரிவு 35 A
இன் கீழ் உள்ள உத்தரவுகள் - மாபுசா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் ஆஃப் கோவா
லிமிடெட், கோவா – உத்தரவுகளின் கால நீட்டிப்பு
ரிசர்வ் வங்கி 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 56 உடன் இணைந்த பிரிவு 35 A இன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி மாபுசா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் ஆஃப் கோவா லிமிடெட்,கோவாவை ஜூலை 24, 2015 தேதியிட்ட உத்தரவின்படி வழிகாட்டு விதிமுறைகளின் கீழ் வைத்தது. இந்த உத்தரவுகள் அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டு, கடைசியாக பிப்ரவரி 15, 2019 தேதியிட்ட உத்தரவுன்படி, ஆகஸ்ட் 18, 2019 வரை நீட்டிக்கப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கி பொது நலன் கருதி, மாபுசா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் ஆஃப் கோவா லிமிடெட்,கோவா வழங்கப்பட்ட ஜூலை 24, 2015 தேதியிட்ட உத்தரவின் செயல்பாட்டுக் காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறது. அதன்படி, இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 56 உடன் இணைந்த பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) இன் கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, மாபுசா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் ஆஃப் கோவா லிமிடெட், கோவா க்கு வழங்கப்பட்ட ஜூலை 24, 2015 தேதியிட்ட அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டு கடைசியாக ஆகஸ்ட் 18, 2019 வரை நீட்டிக்கப்பட்ட உத்தரவு, மேலும் மூன்று மாதங்களுக்கு, மறுஆய்வுக்குட்பட்டு, ஆகஸ்ட் 19, 2019 முதல் நவம்பர் 18, 2019 வரை நீட்டிக்கப்படுகிறது.
அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்ட உத்தரவுகளின் கீழ் உள்ள பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாறாமல் இருக்கும்.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/445
|