ஆகஸ்ட் 20, 2019
வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம் (ஏஏசிஎஸ்), 1949 இன் பிரிவு 35 A இன் கீழ் உள்ள
வழிமுறைகள்- அடூர் கோஆப்ரேடிவ் அர்பன் பாங்க் லிமிடெட், அடூர், கேரளா-
வைப்பு கணக்கு நிதிகளை திரும்பப் பெறும் வரம்பில் தளர்வு
இந்திய ரிசர்வ் வங்கி, அடூர் கோஆப்ரேடிவ் அர்பன் பாங்க் லிமிடெட், அடூர், கேரளா -ஐ நவம்பர் 02, 2018 தேதியிட்ட உத்தரவின்படி வழிகாட்டுதலின் கீழ் வைத்தது. அந்த வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு சேமிப்பு கணக்கு அல்லது நடப்புக் கணக்கு அல்லது வேறு எந்த டெபாசிட் கணக்கிலும் உள்ள மொத்த இருப்புத் தொகையில் ரூ. 2000/- (ரூ. இரண்டாயிரம் மட்டும்) மிகாத தொகையை வைப்புதாரர்கள் திரும்பப் பெற அனுமதிக்கப்பட்டனர்.
இந்திய ரிசர்வ் வங்கி அந்த வங்கியின் நிதி நிலையை மறுஆய்வு செய்துள்ளதுடன், மேற்கூறிய உத்தரவுகளை மாற்றியமைப்பது பொது நலனுக்கு அவசியம் என்று கருதுகிறது. அதன்படி, இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 56 உடன் இணைந்த பிரிவு 35 இன் துணைப்பிரிவு (1) இன் கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, ஆகஸ்ட் 13, 2019 தேதியிட்ட உத்தரவின்படி, அடூர் கோஆப்ரேடிவ் அர்பன் பாங்க் லிமிடெட், அடூர், கேரளா க்கு வழங்கப்பட்ட நவம்பர் 02, 2018 தேதியிட்ட உத்தரவின் 1 (i) பாராவில் திருத்தம் செய்யப்பட்டு, அதன்படி இனிமேல் வைப்புதாரர்கள் ஒவ்வொரு சேமிப்பு கணக்கு அல்லது நடப்புக் கணக்கு அல்லது வேறு எந்த வைப்புக் கணக்கிலும் உள்ள மொத்த நிலுவைத் தொகையில் ₹ 25,000/- (ரூபாய் இருபத்தைந்தாயிரம் மட்டும்) -க்கு மிகாமல் ஒரு தொகையை, ஆகஸ்ட் 13, 2019 தேதியிட்ட ஆர்பிஐ உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு, திரும்பப் பெற அனுமதிக்கப்படுவார்கள். நவம்பர் 2, 2018 தேதியிட்ட உத்தரவின் பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாறாமல் இருக்கும்.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/477
|