ஆகஸ்ட் 05, 2019
இந்திய ரிசர்வ் வங்கி பதினொரு வங்கிகளுக்கு பண அபராதம் விதிக்கிறது
கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி “இந்திய ரிசர்வ் வங்கியின் (வணிக வங்கிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட FI களால் மோசடி வகைப்பாடு மற்றும் அறிக்கையிடல்) உத்தரவுகள் 2016” இன் சில விதிமுறைகளை பின்பற்றாததற்காக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), ஜூலை 31, 2019 தேதியிட்ட உத்தரவுப்படி, பதினொரு வங்கிகளுக்கு பண அபராதம் விதித்துள்ளது.
வரிசை எண் |
வங்கியின் பெயர் |
அபராதத் தொகை
(ரூ. கோடியில்) |
1. |
பாங்க் ஆஃப் பரோடா |
0.5 |
2. |
கார்ப்பரேஷன் பாங்க் |
0.5 |
3. |
பெடரல் பாங்க் லிமிடெட் |
0.5 |
4. |
இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் |
1.0 |
5. |
ஜம்மு & காஷ்மீர் பாங்க் லிமிடெட் |
0.5 |
6. |
ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் |
1.5 |
7. |
பஞ்சாப் & சிந்து பாங்க் |
1.0 |
8. |
பஞ்சாப் நேஷனல் பாங்க் |
0.5 |
9. |
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா |
0.5 |
10. |
யூகோ பாங்க் |
1.0 |
11. |
யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா |
1.0 |
1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் 46 (4) (i) மற்றும் 51 (1) பிரிவுகளுடன் இணைந்த பிரிவு 47 A (1) (c) விதிகளின் கீழ் ஆர்பிஐ க்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி மேற்கூறிய வழிகாட்டு உத்தரவை பின்பற்றத் தவறியததற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் வங்கி அதன் வாடிக்கையாளர்களுடன் கையெழுத்திட்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை பாதிக்கும் நோக்கத்தில் இல்லை.
பின்னணி
மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) கிரிமினல் நடவடிக்கைகளைத் தொடங்கிய பின்னணியில் ஒரு கணக்கில் மோசடியைப் 'உடனடியாக' புகாரளிக்க ஆர்பிஐ யால் அறிவுறுத்தப்பட்ட போதிலும், வங்கிகள் மோசடி பற்றிய தகவல்களை ஆர்பிஐக்கு தெரிவிக்க தாமதப்படுத்தியது / தெரிவிக்காததால் ஆர்பிஐ யின் வழிகாட்டு உத்தரவுகளை மீறின. மேலே குறிப்பிட்டுள்ளபடி ஆர்பிஐ வழங்கிய உத்தரவுகளுக்கு இணங்காததற்காக ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என்பதற்கான காரணங்களைக் காட்டுமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தியது. வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட பதில்கள், வங்கிகளால் கோரப்பட்ட தனிப்பட்ட விசாரணைகளில் வாய்வழி சமர்ப்பிப்புகள் மற்றும் கூடுதல் சமர்ப்பிப்புகளை ஆராய்வது, ஏதேனும் இருந்தால், ஆகியவற்றை ஆராய்ந்த பின் ஆர்பிஐ யின் உத்தரவுகளை பின்பற்றாத குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன மற்றும் ஒவ்வொரு வங்கியும் வழிகாட்டு உத்தரவை பின்பற்றத் தவறிய வரம்பின் அளவை அடிப்படையாகக் கொண்டு மேற்கூறிய பதினொரு வங்கிகளுக்கும் பண அபராதம் விதிக்க வேண்டும் என்ற முடிவுக்கு ரிசர்வ் வங்கி வந்தது.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/351
|