ஒஜார் மெர்சன்ட்ஸ்’ கோ ஆப்ரேடிவ் பாங்க் லிமிடெட்., ஓஜார், மாவட்டம் – நாஸிக் மாஹாராஷ்ட்ரா – அபராதம் விதிக்கப்பட்டது |
ஆகஸ்ட் 05, 2019
ஒஜார் மெர்சன்ட்ஸ்’ கோ ஆப்ரேடிவ் பாங்க் லிமிடெட்., ஓஜார், மாவட்டம் – நாஸிக்
மாஹாராஷ்ட்ரா – அபராதம் விதிக்கப்பட்டது
இந்திய ரிசர்வ் வங்கி, வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 இன் 46 (4) பிரிவுடன் இணைந்த பிரிவு A (1) (c) (கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தும்) விதியின்கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி ஒஜார் மெர்சன்ட்ஸ்’ கோ ஆப்ரேடிவ் பாங்க் லிமிடெட்., ஓஜார், மாவட்டம் – நாஸிக் மாஹாராஷ்ட்ரா மீது ரூ 4.00 லட்சம் (ரூபாய் நான்கு லட்சம் மட்டும்) அபாரதம் விதித்துள்ளது. அர்பன் கோ ஆப்ரேடிவ் வங்கிகளால் (யுசிபி) இயக்குநருக்கு முன்பணம் மற்றும் டிவிடன்ட் அறிவிப்பு தொடர்பான இந்திய ரிசர்வ் வங்கி வழங்கிய உத்தரவுகள்/ அறிவுறுத்தல்கள்/ வழிகாட்டுதல்களை மீறியதற்காக, இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிக்கு விளக்கம் கோரல் அறிவிப்பு அனுப்பியிருந்தது, அதற்கு பதிலளிக்கும் விதமாக வங்கி எழுத்துப்பூர்வ பதிலை சமர்ப்பித்தது. நிகழ்வின் உண்மைகள் மற்றும் வங்கியின் பதில் ஆகியவற்றை பரிசீலித்தபின், இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு உத்தரவுகள் மீறப்பட்டன என்ற மேற்கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன மற்றும் அபராதம் விதிக்க வேண்டும் என்ற முடிவுக்கு ஆர் பி ஐ வந்தது.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/345
| |