Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (196.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 30/08/2019
வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 ஏ இன் கீழ் உள்ள வழிகாட்டுதல்கள் – ருபீ கோஆபரேடிவ் பாங்க் லிமிடெட், புனே, மகாராஷ்டிரா

ஆகஸ்ட் 30, 2019

வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 ஏ இன் கீழ் உள்ள வழிகாட்டுதல்கள் – ருபீ கோஆபரேடிவ் பாங்க் லிமிடெட், புனே, மகாராஷ்டிரா

ருபீ கோஆபரேடிவ் பாங்க் லிமிடெட், புனே, மகாராஷ்டிரா பிப்ரவரி 21, 2013 தேதியிட்ட உத்தரவின்படி பிப்ரவரி 22, 2013 தேதி வர்த்தக முடிவில் இருந்து வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. உத்தரவுகளின் செல்லுபடி காலம் அவ்வப்போது அடுத்தடுத்த உத்தரவுகளின் மூலம் நீட்டிக்கப்பட்டு, கடைசியாக மே 27, 2019 தேதியிட்ட உத்தரவின் மூலம் ஆகஸ்ட் 31, 2019 வரை மதிப்பாய்வுக்கு உட்பட்டு நீட்டிக்கப்பட்டது.

இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 56 உடன் இணைந்த பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) இன் கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, மேற்கண்ட வங்கிக்கு வழங்கப்பட்ட பிப்ரவரி 21, 2013 தேதியிட்ட உத்தரவின் செல்லுபடி காலம், அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டு, கடைசியாக ஆகஸ்ட் 31, 2019 வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 28, 2019 தேதியிட்ட உத்தரவின்படி செப்டம்பர் 01, 2019 முதல் நவம்பர் 30, 2019 வரை மேலும் மூன்று மாதங்களுக்கு மதிப்பாய்வுக்கு உட்பட்டு, செல்லுபடி காலம் தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது என்று பொதுமக்களின் தகவலுக்காக தெரிவிக்கிறது. உத்தரவுகளின் கீழ் உள்ள பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாறாமல் இருக்கும்.

மேற்கண்ட நீட்டிப்பை அறிவிக்கும் ஆகஸ்ட் 28, 2019 தேதியிட்ட உத்தரவின் நகல், வங்கியின் வளாகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும்.

இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்கூறிய நீட்டிப்பு மற்றும் / அல்லது மாற்றியமைத்தல் வங்கியின் நிதி நிலைமையில் கணிசமான முன்னேற்றம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி திருப்தி அடைந்துள்ளது என்பதைக் குறிக்காது.

யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/577

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்