செப்டம்பர் 03, 2019
பிடார் மஹிளா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், பிடார் - வங்கியியல்
ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் கீழ் அனைத்து
உள்ளடக்கிய உத்தரவுகளையும் நீட்டித்தல்
இந்திய ரிசர்வ் வங்கி, பொது மக்களின் நலன் கருதி, பிடார் மஹிளா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், பிடார், கர்நாடகா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பிப்ரவரி 21, 2019 தேதியிட்ட உத்தரவின் செயல்பாட்டுக் காலத்தை நீட்டிப்பது அவசியம் எனக் கருதுகிறது என்பதை பொதுமக்களின் தகவலுக்காக அறிவிக்கிறது.
அதன்படி, இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின்(கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) பிரிவு 35A இன் துணைப்பிரிவு (1) இன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, பிடார் மஹிளா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பிப்ரவரி 21, 2019 தேதியிட்ட, ஆகஸ்ட் 31, 2019 வரை நீட்டிக்கப்பட்ட, வழிகாட்டுதல் உத்தரவுகளின் செல்லுபடி காலத்தை, செப்டம்பர் 1, 2019 முதல் பிப்ரவரி 29, 2020 வரை மேலும் ஆறு மாத காலத்திற்கு நீட்டிக்கிறது.
வழிகாட்டுதல் உத்தரவின் மற்ற விதிமுறைகளும் நிபந்தனைகளும் மாறாமல் இருக்கும். இந்த வழிகாட்டுதல் உத்தரவு வெளியிடப்பட்டதன் காரணமாக, மேற்படி வங்கியின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்வதாகக் கருதக் கூடாது. அதன் நிதி நிலை முன்னேற்றமடையும் வரை கட்டுப்பாடுகளுக்குட்பட்டு, வங்கி தனது வர்த்தகத்தைத் தொடரும். சூழ்நிலைகளைப் பொறுத்து, இந்திய ரிசர்வ் வங்கி இந்த வழிகாட்டுதல்களை மாற்றியமைக்கலாம்.
(யோகேஷ் தயால்)
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/595 |