செப்டம்பர் 13, 2019
கோவா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், பனாஜி (கோவா) மீது இந்திய ரிசர்வ்
வங்கி பண அபராதம் விதிக்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) செப்டம்பர் 11, 2019 தேதியிட்ட உத்தரவின்படி, மேற்பார்வை நடவடிக்கை கட்டமைப்பை(SAF) கடைப்பிடிக்க தவறியதற்காக, கோவா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், பனாஜி (தி பாங்க்) மீது ரூ 5 லட்சம் மட்டும் பண அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதமானது 1949 –ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் பிரிவு 47 A (1) (c) உடன் இணைந்த பிரிவு 46 (4) (i) மற்றும் பிரிவு 56 ன் கீழ் ஆர்பிஐ-க்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி மேற்கூறப்பட்ட உத்தரவுகளைக் கடைப்பிடிக்காததற்காக விதிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் வங்கி தனது வாடிக்கையாளர்களுடன் ஏற்படுத்தியுள்ள எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை பாதிக்கும் நோக்கில் அல்ல.
பின்னணி
ஆர்பிஐ, மார்ச் 31, 2018 வங்கியின் நிதி நிலை குறித்து நடத்திய ஆய்வில் மேற்பார்வை நடவடிக்கை கட்டமைப்பு(SAF) மற்றும் வைப்பு கணக்குகள் பராமரிப்பு பற்றி ஆர்பிஐ வழங்கிய உத்தரவுகளை கடைபிடிக்க தவறியது கண்டுபிடிக்கப்பட்டது. உத்தரவுகளை கடைப்பிடிக்காததற்காக ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என்ற காரணத்தை வழங்குமாறு அறிவுறுத்தி வங்கிக்கு ஒரு அறிவிப்பு வழங்கியது. வங்கியின் பதில், தனிப்பட்ட விசாரணையின் போது செய்யப்பட்ட வாய்வழி சமர்ப்பிப்புகள் மற்றும் தனிப்பட்ட விசாரணையின் பின்னர் வங்கி அளித்த கூடுதல் சமர்ப்பிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்ட பின்னர், மேற்பார்வை நடவடிக்கை கட்டமைப்பு(SAF) பற்றி ஆர்பிஐ வழங்கிய உத்தரவுகளை கடைபிடிக்காததற்காக பண அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு ஆர்பிஐ வந்தது.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/698 |