Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (191.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 30/09/2019
1949 –ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் கீழ் உள்ள வழிகாட்டுதல்கள் - சி.கே.பி கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா

செப்டம்பர் 30, 2019

1949 –ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன்
கீழ் உள்ள வழிகாட்டுதல்கள் - சி.கே.பி கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை,
மகாராஷ்டிரா

சி.கே.பி கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா, ஏப்ரல் 30, 2014 தேதியிட்ட உத்தரவின் படி மே 2, 2014 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து வழிகாட்டுதல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டது. உத்தரவுகளின் செல்லுபடி காலம் அவ்வபோது நீட்டிக்கப்பட்டு கடைசியாக ஜூன் 24, 2019 தேதியிட்ட உத்தரவின்படி செப்டம்பர் 30, 2019 வரை மறு ஆய்வுக்குட்பட்டு நீடிக்கப்பட்டது.

இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A துணைப்பிரிவு (1) உடன் இணைந்த பிரிவு 56 இன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி மேற்கண்ட வங்கிக்கு வழங்கப்பட்ட ஏப்ரல் 30, 2014 தேதியிட்ட உத்தரவு, அவ்வபோது மாற்றியமைக்கப்பட்டு, கடைசியாக செப்டம்பர் 30, 2019 வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், இதன் செல்லுபடி காலம் செப்டம்பர் 25, 2019 தேதியிட்ட உத்தரவின்படி மறு ஆய்வுக்கு உட்பட்டு அக்டோபர் 01, 2019 முதல் அக்டோபர் 31, 2019 வரை மேலும் ஒரு மாத காலத்திற்கு தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது என்பதை பொதுமக்களின் தகவலுக்காக அறிவிக்கிறது.

மேற்கண்ட நீட்டிப்பை அறிவிக்கும் செப்டம்பர் 25, 2019 தேதியிட்ட உத்தரவின் நகல், பொதுமக்களின் பார்வைக்காக வங்கியின் வளாகத்தில் வைக்கப்படும்.

இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்கூறிய நீட்டிப்பு மற்றும் / அல்லது மாற்றியமைத்தல் வங்கியின் நிதி நிலையில் கணிசமான முன்னேற்றம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி திருப்தி அடைந்துள்ளது என்பதைக் குறிக்காது.

யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/817

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்