யுனைடெட் ஓவர்சீஸ் பாங்க் லிமிடெட் மீது இந்திய ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது |
அக்டோபர் 03, 2019
யுனைடெட் ஓவர்சீஸ் பாங்க் லிமிடெட் மீது இந்திய ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), அக்டோபர் 01, 2019 தேதியிட்ட உத்தரவின் படி, யுனைடெட் ஓவர்சீஸ் பாங்க் லிமிடெட்(தி பாங்க்) க்கு 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறை சட்டத்தின்(தி ஆக்ட்) பிரிவு 10 B இன் விதிகளுக்கு இணங்கத் தவறியதற்காக ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதம் 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறை சட்டத்தின் பிரிவு 47 A (1) (c) உடன் இணைந்தப் பிரிவு 46 (4) (i) இன் கீழ் ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, மேற்கண்ட விதிகளை வங்கி பின்பற்றாததைக் கணக்கில் கொண்டு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை இணக்கத்தின் வழிகாட்டுதல் உத்தரவுகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் வங்கி தனது வாடிக்கையாளர்களுடன் ஏற்படுத்தியுள்ள எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை பாதிக்கும் நோக்கத்தில் அல்ல.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/854 |
|