அக்டோபர் 3, 2019
ரிசர்வ் வங்கி பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கோஆப்ரேட்டிவ் பாங்க்
லிமிடெட் வைப்புதாரர்களுக்கான பணம் திரும்பப் பெறும் வரம்பை ₹ 25,000 ஆக உயர்த்துகிறது
பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட் வைப்புதாரர்கள் தங்கள் கணக்குகளில் உள்ள மொத்த நிலுவைத் தொகையில் 10,000/-(ரூபாய் பத்தாயிரம் மட்டும்) வரை திரும்பப் பெற இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது என்பதை நினைவு கூரலாம்.
இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் வங்கியின் பணப்புழக்க நிலையை மறு ஆய்வு செய்ததுடன், வைப்புத்தொகையாளர்களின் இன்னலைக் குறைக்கும் நோக்கில், திரும்பப் பெறுவதற்கான வரம்பை ரூபாய் 25000/- (இருபத்தைந்து ஆயிரம் மட்டும்) ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது.
மேற்கண்ட தளர்வு மூலம், வங்கியின் 70% க்கும் அதிகமான வைப்புத்தொகையாளர்கள் தங்களது மொத்த கணக்கு நிலுவையையும் திரும்பப் பெற முடியும். ரிசர்வ் வங்கி, வங்கியின் நிலையை கண்காணித்து வருவதுடன் வைப்புதாரர்களின் நலனுக்காக தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும்.
பஞ்சாப் மற்றும் மகராஷ்டிரா கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், நிர்வாகிக்கு உதவ வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 – ன் பிரிவு 36 AAA(5) (a) உடன் இணைந்த பிரிவு 56 இன் படி மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுவை நியமிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/861 |