அக்டோபர் 14, 2019
இந்திய ரிசர்வ் வங்கி சிண்டிகேட் பாங்க் மீது பண அபராதம் விதிக்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), (i) மோசடிகளின் வகைப்பாடு மற்றும் அறிக்கையிடல் மற்றும் (ii) வீட்டுக் கடன் பிரிவு : புதுவித வீட்டுவசதி கடன் வழங்குதல் – வீட்டுக் கடன்களை முன்கூட்டியே வழங்குதல் போன்ற உத்தரவுகளுக்கு இணங்காததற்காக அக்டோபர் 14, 2019 தேதியிட்ட உத்தரவின் பேரில் சிண்டிகேட் பாங்க்(தி பாங்க்) மீது ரூ. 75 லட்சம் (எழுபத்தைந்து லட்சம்) அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதமானது சிண்டிகேட் பாங்க் மேற்கண்ட உத்தரவுகளைக் கடைப்பிடிக்கத் தவறியதால், 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 47 A (1) (c) உடன் இணைந்த பிரிவுகள் 46 (4) (i) மற்றும் 51 (1) இன் கீழ் ஆர்பிஐ க்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் வங்கி அதன் வாடிக்கையாளர்களுடன் கையெழுத்திட்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை பாதிக்கும் நோக்கத்தில் இல்லை.
பின்னனி
மோசடி அறிக்கை மற்றும் வீட்டுக் கடன்களை வழங்குவவது தொடர்பாக ஆர்பிஐ வழங்கிய சில வழிமுறைகளுக்கு இணங்க வங்கி தவறிவிட்டது என்று ஆர்பிஐ யில் வங்கி தாக்கல் செய்த ரிடர்ன் மூலம் தெரியவந்தது. இதன் அடிப்படையில் ஆர்பிஐ வழங்கிய உத்தரவுகளுக்கு இணங்காததற்காக ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என்பதற்கான காரணத்தைக் காட்டுமாறு வங்கிக்கு அறிவிப்பு வழங்கப்பட்டது. வங்கியிடமிருந்து பெறப்பட்ட பதில் மற்றும் தனிப்பட்ட விசாரணையின் சமர்ப்பிப்புகளின் உண்மைகளை பரிசீலித்தபின், ஆர்பிஐ உத்தரவுகளுக்கு இணங்கவில்லை என்ற மேற்கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன மற்றும் பண அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு ஆர்பிஐ வந்தது.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/941 |