1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (ஏஏசிஎஸ்) பிரிவு 35 A இன் கீழ் வழிகாட்டுதல்கள் – டாக்டர் சிவாஜிராவ் பாட்டில் நிலாங்கேகர் அர்பன் கோஆப்ரேட்டிவ் லிமிடெட் நிலாங்கா, மாவட்டம் லத்தூர், மகாராஷ்டிரா – கால நீட்டிப்பு |
அக்டோபர் 17, 2019
1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (ஏஏசிஎஸ்) பிரிவு 35 A இன் கீழ்
வழிகாட்டுதல்கள் – டாக்டர் சிவாஜிராவ் பாட்டில் நிலாங்கேகர் அர்பன் கோஆப்ரேட்டிவ்
லிமிடெட் நிலாங்கா, மாவட்டம் லத்தூர், மகாராஷ்டிரா – கால நீட்டிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி, பொது நலன் கருதி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின்(ஏஏசிஎஸ்) பிரிவு 35 A உட்பிரிவு (1) உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி பிப்ரவரி 16, 2019 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து டாக்டர் சிவாஜிராவ் பாட்டில் நிலாங்கேகர் அர்பன் கோஆப்ரேட்டிவ் லிமிடெட் நிலாங்கா, மாவட்டம் லத்தூர், மகாராஷ்டிரா நிறுவனத்தை வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைத்தது. ரிசர்வ் வங்கி தற்போது இந்த வழிகாட்டு உத்தரவுகளின் செல்லுபடி காலத்தை அக்டோபர் 16, 2019 முதல் ஏப்ரல் 15, 2020 வரை மேலும் ஆறு மாத காலத்திற்கு மதிப்பாய்வுக்கு உட்பட்டு நீட்டித்துள்ளது. இந்த உத்தரவுகள் பணம் எடுப்பது/பெறுவது குறித்து சில கட்டுப்பாடுகள் மற்றும்/அல்லது உச்ச வரம்பை விதிக்கிறது. விரிவான உத்தரவுகள் ஆர்வமுள்ள பொதுமக்களின் பார்வைக்காக வங்கியின் வளாகத்தில் வைக்கப்படும். இந்திய ரிசர்வ் வங்கி சூழ்நிலைகளைப் பொறுத்து இந்த உத்தரவுகளில் மாற்றங்களைப் பரிசீலிக்கலாம். இந்த உத்தரவுகளை வழங்கியுள்ளதால் இந்திய ரிசர்வ் வங்கி மேற்கண்ட நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்வதாகக் கருதக்கூடாது. வங்கி அதன் நிதிநிலை மேம்படும் வரை வங்கி வர்த்தகத்தைக் கட்டுப்பாடுகளுடன் தொடரும்.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/972 |
|