அக்டோபர் 31, 2019
1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A உடன்
இணைந்த பிரிவு 56 இன் கீழ் உள்ள வழிகாட்டுதல்ககள் - மட்காம் அர்பன்
கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மார்காவோ, கோவா - உத்தரவுகளின் கால
நீட்டிப்பு மற்றும் பணம் திரும்பப் பெறும் வரம்பில் தளர்வு
இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A உடன் இணைந்த பிரிவு 56 இன் கீழ் மட்காம் அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மார்காவோ, கோவாவுக்கு ஏப்ரல் 26, 2019 தேதியிட்ட DCBS.CO.BSD-I/D-13/12.22.158/2018-19 உத்தரவின்படி மே 02, 2019 வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து நவம்பர் 02, 2019 வரை வழிகாட்டு உத்தரவுகளை வெளியிட்டது. தற்போதுள்ள உத்தரவுகளைப் பொறுத்தவரை, மற்ற நிபந்தனைகளுக்கிடையில், ஒவ்வொரு சேமிப்பு வங்கி அல்லது நடப்புக் கணக்கு அல்லது வேறு எந்த வைப்புக் கணக்கிலும் உள்ள மொத்த நிலுவைத் தொகையில் ரூ. 5,000/- ஐத் தாண்டாத தொகை ஒவ்வொரு வைப்புத்தொகையாளராலும் திரும்பப் பெற அனுமதிக்கப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கி அந்த வங்கியின் நிதி நிலையை மறுஆய்வு செய்துள்ளதுடன், மேற்கூறிய உத்தரவுகளை மாற்றியமைப்பது பொது நலனில் அவசியம் என்று கருதுகிறது. அதன்படி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A இன் துணைப்பிரிவுகள் (1) மற்றும் (2) உடன் இணைந்த பிரிவு 56 ஆகியவற்றின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, மட்காம் அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மார்காவோ, கோவாவுக்கு வழங்கப்பட்ட ஏப்ரல் 26, 2019 தேதியிட்ட DCBS.CO.BSD-I/D-13/12.22.158/2018-19 உத்தரவின் பாரா 1 (i), கீழ்க்கண்டபடி மாற்றப்படும்:
“i. ஒவ்வொரு சேமிப்பு வங்கிக் கணக்கு அல்லது நடப்புக் கணக்கு அல்லது கால வைப்புக் கணக்கு அல்லது வேறு எந்த வைப்புக் கணக்கிலும் (எந்த பெயரில் அழைக்கப்படினும்) உள்ள மொத்த நிலுவைத் தொகையில் ரூ. 30,000/- (ரூபாய் முப்பதாயிரம் மட்டும்)-ஐத் மிகாத தொகை, அத்தகைய வைப்புத்தொகையாளர் எந்த வகையிலும் வங்கியில் கடன் வைத்திருந்தால், அதாவது கடன் வாங்குபவர் அல்லது ஜாமீன், வங்கி வைப்புகளுக்கு எதிரான கடன்கள் உட்பட, அந்த தொகை முதலில் சம்பந்தப்பட்ட கடன் கணக்கு/கணக்குகளில் சரிசெய்யப்பட்ட பின், வைப்புத்தொகையாளரால் திரும்பப் பெற அனுமதிக்கப்படலாம்”
வைப்புத்தொகையாளர்களுக்கு செலுத்த வேண்டிய தொகை வங்கியால் தனியாக ஒரு எஸ்க்ரோ கணக்கில் மற்றும் / அல்லது ஒதுக்கப்பட்ட பத்திரங்களில் வைக்கப்பட்டு, அவை திருத்தப்பட்ட உத்தரவுகளின்படி வைப்புத்தொகையாளர்களுக்கு செலுத்த மட்டுமே வங்கியால் பயன்படுத்தப்பட வேண்டும்.
மேலும், இந்திய ரிசர்வ் வங்கி பொது நலனில் திருப்தி அடைந்து, வழங்கப்பட்ட ஏப்ரல் 26, 2019 தேதியிட்ட DCBS.CO.BSD-I/D-13/12.22.158/2018-19 உத்தரவின் செயல்பாட்டு காலத்தை நீட்டிக்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறது. அதன்படி, இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) உடன் இணைந்த பிரிவு 56 இன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, ஏப்ரல் 26, 2019 தேதியிட்ட மட்காம் அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மார்காவோ, கோவாவுக்கு வழங்கப்பட்ட, நவம்பர் 02, 2019 வரை செல்லுபடியாகும், DCBS.CO.BSD-I/D-13/12.22.158/2018-19 உத்தரவின் செல்லுபடி காலம் மதிப்பாய்வுக்கு உட்பட்டு நவம்பர் 03, 2019 முதல் மே 02, 2020 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது.
குறிப்பின் கீழ் உள்ள உத்தரவின் பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாறாமல் இருக்கும்.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/1063 |