நவம்பர் 19, 2019
கோனாரக் அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், தானே, மகாராஷ்டிரா
நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) -இன் பிரிவு 47 A (1) (b) உடன் இணைந்த பிரிவு 46 (4) (i) இன் கீழ் தனக்கு வழங்கப்பட அதிகாரங்களைப் பயன்படுத்தி, கோனாரக் அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், தானே, மகாராஷ்டிரா நிறுவனத்திற்கு இயக்குநர் தொடர்பான கடன்கள் மீதான இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்கள் / வழிகாட்டுதல்களை மீறியதற்காக, ரூ. 4.00 லட்சம் (ரூபாய் நான்கு லட்சம் மட்டும்) அபராதம் விதித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி, மேற்கண்ட வங்கிக்கு வெளியிட்ட காரண விளக்க அறிவிப்பிற்கு பதிலளிக்கும் விதமாக வங்கி எழுத்துப்பூர்வ பதிலை சமர்ப்பித்ததுடன், வாய்வழி சமர்ப்பிப்புகளையும் செய்தது. நிகழ்வின் உண்மைகளையும், இந்த விவகாரத்தில் வங்கியின் பதிலையும் பரிசீலித்தபின், ரிசர்வ் வங்கி உத்தரவுகளுக்கு இணங்கவில்லை என்ற மேற்கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன மற்றும் பண அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு இந்திய ரிசர்வ் வங்கி வந்தது.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/1218 |