நவம்பர் 20, 2019
இந்திய ரிசர்வ் வங்கி இந்தியன் பாங்க் நிறுவனத்திற்கு பண அபராதம் விதிக்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) நவம்பர் 18, 2019 தேதியிட்ட உத்தரவுப்படி, இருப்புநிலைகளை போலியாக சித்தரித்தல் மற்றும் மோசடிகளைப் புகாரளித்தல் மற்றும் வகைப்படுத்துதல் குறித்து ஆர்பிஐ வெளியிட்டுள்ள உத்தரவுகளை பின்பற்றாததற்காக இந்தியன் பாங்க் (தி பாங்க்) நிறுவனத்திற்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதம் 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 47 A (1) (c) உடன் இணைந்த பிரிவு 46 (4) (i) மற்றும் பிரிவு 51 (1) விதிகளின் கீழ் ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, ஆர்பிஐ யின் மேற்கூறிய விதிமுறைகளை கடைப்பிடிக்காததற்காக விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் வங்கி அதன் வாடிக்கையாளர்களுடன் கையெழுத்திட்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை பாதிக்கும் நோக்கத்தில் அல்ல.
பின்னணி
ஆர்பிஐ நடத்திய சட்டப்படியான வங்கியின் நிதிநிலைத் தொடர்பான மார்ச் 31, 2018 நிலவரப்படி நடத்தப்பட்ட ஆய்வில், இருப்புநிலைகளை போலியாக சித்தரித்தல், உத்தரவாதங்கள் மற்றும் இணை ஏற்றுக்கொள்ளுதல் தொடர்பான வாக்குறுதிகளுக்கு இணங்குதல், உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் விதிமுறைகள் மற்றும் மோசடிகளின் வகைப்பாடு மற்றும் அறிக்கையிடல் ஆகியவைத் தொடர்பாக ரிசர்வ் வங்கி வழங்கிய உத்தரவுகளை வங்கிக் கடைப்பிடிக்காததுக் கண்டறியப்பட்டது. மேற்கூறிய வழிமுறைகளுக்கு இணங்காததற்காக ஏன் பண அபராதம் விதிக்கப்படக்கூடாது என்பதற்கான காரணத்தைக் காட்டுமாறு வங்கிக்கு ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. வங்கியின் பதில் மற்றும் தனிப்பட்ட விசாரணையின் போது செய்யப்பட்ட வாய்வழி சமர்ப்பிப்புகளை பரிசீலித்தபின், இருப்புநிலைகளை போலியாக சித்தரித்தல் மற்றும் மோசடிகளின் வகைப்பாடு மற்றும் அறிக்கையிடல் தொடர்பான வழிமுறைகளுக்கு இணங்காதது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக பண அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு ஆர்பிஐ வந்தது.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/1234 |