டிசம்பர் 24, 2019
1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு
35 A இன்
கீழ் உத்தரவுகள் - ஸ்ரீ ஆனந்த் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட்., சின்சவாட், புனே,
மகாராஷ்டிரா
ஸ்ரீ ஆனந்த் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், சின்சவாட், புனே, மாகாராஷ்டிரா, ஜூன் 25, 2019 தேதியிட்ட DCBS.CO.BSD-I6/12.22.474/2018-19 உத்தரவின்படி ஜூன் 21, 2019 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து ஆறு மாத காலத்திற்கு வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டது.
2. இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) உடன் இணைந்த பிரிவு 56 இன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, மேற்கண்ட வங்கிக்கு வழங்கிய ஜூன் 21, 2019 தேதியிட்ட DCBS.CO.BSD-I6/12.22.474/2018-19 உத்தரவின் செல்லுபடி காலத்தை அவ்வபோது மாற்றியமைத்து, கடைசியாக டிசம்பர் 24, 2019 வரை நீட்டித்திருந்த நிலையில், தற்போது டிசம்பர் 23, 2019 தேதியிட்ட DOR.CO.AID/No.D-44/12.22.474/2019-20 உத்தரவின்படி மதிப்பாய்வுக்கு உட்பட்டு டிசம்பர் 25, 2019 முதல் மார்ச் 24, 2020 வரை மேலும் மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து நீட்டிக்கிறது என்பதைப் பொது மக்களின் தகவலுக்காக அறிவிக்கிறது.
3. வழிகாட்டுதல் உத்தரவுகளின் கீழ் உள்ள மற்ற விதிமுறைகளும் நிபந்தனைகளும் மாறாமல் இருக்கும். மேற்கண்ட கால நீட்டிப்பை அறிவிக்கும் டிசம்பர் 23, 2019 தேதியிட்ட உத்தரவின் நகல், வங்கியின் வளாகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும்.
4. இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்கூறிய கால நீட்டிப்பு மற்றும் / அல்லது திருத்தங்களால் வங்கியின் நிதி நிலைமையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி திருப்தி அடைந்துள்ளதைக் குறிக்காது.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/1507 |