ஜனவரி 31, 2020
சிவம் சஹகாரி வங்கி லிமிடெட், இச்சல்கரஞ்சி, மாவட்டம் - கோலாப்பூர், மகாராஷ்டிரா
வழங்கப்பட்ட வழிகாட்டுதல் உத்திரவுகள் - கால நீட்டிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி (மே 18, 2018 தேதியிட்ட DCBS.CO.BSD-I/D-6/12.22.351/2017-18 உத்தரவு) சிவம் சஹாகரி வங்கி லிமிடெட், இச்சல்கரஞ்சி, மாவட்டம், கோலாப்பூர், மகாராஷ்டிராவிற்கு, மே 19, 2018 அன்று வர்த்தகம் முடிவடைந்ததிலிருந்து வழிகாட்டுதல் உத்திரவின் கீழ் வைக்கப்பட்டது
2. இந்திய ரிசர்வ் வங்கி, இதன்மூலம் பொதுமக்களின் தகவல்களுக்கு அறிவிப்பது 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) உடன் இணைந்த பிரிவு 56 ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, மேற்கூறிய வழிகாட்டுதல் உத்தரவு, ஜனவரி 29, 2020 தேதியிட்ட DOR.CO.AID/D-50/12.22.351/2019-20 உத்தரவின் படி மார்ச் 31, 2020 ஆம் தேதி வரை மறு ஆய்வுக்கு உட்பட்டு, வங்கிக்கு தொடர்ந்து நீட்டிக்கப்படும் என்று அறிவுறுத்துகிறது.
3. நீட்டிக்கப்பட்ட காலத்தை அறிவிக்கும் மேற்கண்ட உத்தரவின் நகல், வங்கியின் வளாகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும்.
4. இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்கூறிய நீட்டிப்பு மற்றும் / அல்லது மாற்றியமைத்தல் ரிசர்வ் வங்கி வங்கியின் நிதி நிலையில் திருப்தி அடைந்ததைக் குறிக்காது.
(யோகேஷ் தயால்)
தலைமைப் பொது மேலாளர்
செய்தி வெளியீடு: 2019-2020/1852
|