ஜூன் 22, 2020
டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பான பயன்பாடு குறித்துப் பொது
மக்களுக்கு ரிசர்வ் வங்கி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது
டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் கவனம் மற்றும் பாதுகாப்பு ஆகியவையே அதன் பயன்பாட்டாளர்களின் தலையாய முக்கியத்துவமாகும். ரிசர்வ் வங்கி, இதனை உறுதிப்படுத்த, பல்வேறு பொறிமுறைகளைத் தொடர்ச்சியாகவும் மற்றும் அதன் முதன்மைத் திட்டமான “ஆர்பிஐ கெஹ்தா ஹை” உட்பட பல டிஜிட்டல் விழிப்புணர்வு முகாம்களை அச்சு மற்றும் ஆடியோ காட்சி ஊடகங்களின் வழியாக மிகவும் தீவிரமாகவும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
சமீபத்திய நாட்களில், பயன்பாட்டாளர்கள், கேஓய்சி தேவைகளைப் பூர்த்திசெய்தல், அடையாளங்களை உருவகப்படுத்துதல் மற்றும் வங்கிகளின் வலைதளங்கள் மற்றும் கட்டண இயக்க ஆபரேட்டர் போன்ற, மோசடி செய்பவர்களின் கற்பனையான உத்திகளுக்கு இரையாகி வருகின்றனர்.
பாதுகாப்பான டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் பொதுமக்கள் மத்தியில் ஊக்குவிக்க பயன்பாட்டாளர்கள் பின்வரும் வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தப்படுகிறார்கள் (i) எவரிடமும் தங்களின் ஏடிஎம் / கார்ட் (டெபிட் / கிரெடிட் / ப்ரீபெய்ட்) விவரங்களைப் பகிரக் கூடாது (ii) எவரிடமும் தங்களின் கடவுச்சொல், பின், ஓடிபி, சிவிவி, யுபிஐ-பின் நம்பர் போன்றவற்றைப் பகிரக் கூடாது (iii) வங்கி அல்லது மற்றபணப் பரிவர்த்தனைகளைப் பொதுவெளி, திறந்தவெளி அல்லது இலவச வைஃபை நெட்வொர்க்கள் மூலமாக மேற்கொள்வதைத் தவிர்க்கவும் மற்றும் (iv) முக்கியமான வங்கி சமந்தப்பட்ட தகவல்களை மொபைல், இமெயில், எலெக்ட்ரானிக் வாலெட் அல்லது பர்ஸ்களில் சேமிக்காமல் இருக்கவும். வங்கிகள் மற்றும் பிற கட்டண இயக்க ஆபரேட்டர்கள் கடவுச்சொல், பின், ஓடிபி, சிவிவி, யுபிஐ-பின் நம்பர் போன்ற விவரங்களை எப்பொழுதும் கேட்பதில்லை என்பதை நுகர்வோர்கள் நினைவில் கொள்ளலாம்.
(யோகேஷ் தயால்)
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/2534 |