ஜனவரி 08, 2021
சாதாரணப் பணப்புழக்க மேலாண்மை நடவடிக்கைகளின் மறுதொடக்கம்
பிப்ரவரி 06, 2020 அன்று மிகவும் சுருக்கமாகவும் தெளிவாகவும் பணப்புழக்க மேலாண்மைக்குத் தேவையான நோக்கங்களையும் கருவிகளையும் எடுத்துரைக்கும் திருத்தியமைக்கப்பட்ட பணப்புழக்க மேலாண்மைக் கட்டமைப்பை ரிசர்வ் வங்கி அறிவித்தது.
2. கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல், வேகமாக வளர்ந்து வரும் நிதி நிலைமைகள் மற்றும் பொதுமுடக்கம் மற்றும் சமூக இடைவெளி ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள இடிவுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, திருத்தியமைக்கப்பட்ட பணப்புழக்க மேலாண்மைக் கட்டமைப்பு மற்றும் நிலையான விகித ரிவர்ஸ் ரெப்போ சாளரம் ஆகியவற்றைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கவும் விளிம்பு நிலை வசதி (எம்.எஸ்.எஃப்) நடவடிக்கைகளை நாள் முழுவதும் கிடைக்குமாறு ஏற்பாடு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தகுதியுள்ள சந்தைப் பங்கேற்பாளர்களுக்கு தேவையான அதிக நெகிழ்வுத்தன்மையுடனான பணப்புழக்க மேலாண்மையை வழங்குவதற்கான நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளது.
3. கோவிட்-19 ஏற்படுத்தியுள்ள செயல்பாட்டு இடமாற்றங்கள் மற்றும் அதிகரித்த சுகாதார அபாயங்களைக் கருத்தில் கொண்டு, ஏப்ரல் 07, 2020 முதல் வெவ்வேறு சந்தைப் பிரிவுகளுக்கான வணிக நேரங்களைக் குறைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. பின்னர், படிப்படியான பொதுமுடக்கத் தளர்வுகள் மற்றும் மக்கள் நடமாட்டம் மற்றும் அலுவலக இயக்கங்களில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கியால் ஒழுங்குப்படுத்தப்படும் சந்தைகளின் வணிக நேரங்களை நவம்பர் 09, 2020 முதல் படிப்படியாக மீட்டெடுக்க முடிவு செய்யப்பட்டது.
4. வளர்ந்து வரும் பணப்புழக்கம் மற்றும் நிதி நிலைமைகளின் மதிப்பாய்வில், படிப்படியாக சாதாரணப் பணப்புழக்க மேலாண்மை நடவடிக்கைகளை மீட்டெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கேற்ப, மாறுபடும் விகித ரிவர்ஸ் ரெப்போ ஏலத்தை ஜனவரி 15, 2021, வெள்ளிக்கிழமை அன்று பிப்ரவரி 06, 2020 அன்று வெளியிடப்பட்ட திருத்தியமைக்கப்பட்ட பணப்புழக்க மேலாண்மைக் கட்டமைப்பின் கீழ் நடத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
வ.எண் |
அறிவிக்கப்பட்டத் தொகை
(ரூ கோடியில்) |
செல்லுபடி காலம்
(நாள்) |
சாளர நேரம் |
ரிவர்சல் தேதி |
1 |
2,00,000 |
14 |
11.30 am – 12.00 pm |
ஜனவரி 29, 2021
(வெள்ளிக்கிழமை) |
5. ரிசர்வ் வங்கியின் பிப்ரவரி 13, 2020 தேதியிட்ட பத்திரிக்கை வெளியீட்டின் 2019-2020/1947 கீழ் உள்ள செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் மாறாமல் இருக்கும்.
6. நிலையான விகித ரிவர்ஸ் ரெப்போ மற்றும் விளிம்பு நிலை வசதி (எம்.எஸ்.எஃப்) நடவடிக்கைகள் தொடர்ந்து நாள் முழுவதும் மேற்கொள்ளப்படும். டிசம்பர் 04, 2020 எம்பிசி கூற்றில் சுட்டிக்காட்டியுள்ளபடி, ரிசர்வ் வங்கி நாட்டில் போதுமான அளவு பணப்புழக்கம் இருப்பதை உறுதிப்படுத்தும் என்று மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.
(யோகேஷ் தயால்)
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2020-2021/910 |