ரூபாய்
நோட்டுகளை
மாலைகளாகத்
தயாரிக்கவோ,
பந்தல்களை
அலங்கரிக்கவோ,
வழிபாட்டு
இடங்களில்
உபயோகிக்கவோ,
சமூக
நிகழ்ச்சிகளில்
தலைவர்களுக்கு
அணிவிக்கவோ
இதுபோன்ற
பிறவற்றிற்குப்
பயன்படுத்தக்
கூடாது என்று
பொதுமக்களை
இந்திய
ரிசர்வ்
வங்கி
கேட்டுக்
கொள்கிறது.
அத்தகைய
நடவடிக்கைகள்
ரூபாய்
நோட்டுகளைச்
சிதைப்பதோடு
அவற்றின்
பயன்படுத்தக்கூடிய
கால அளவையும்
குறைக்கிறது.
ரூபாய்
நோட்டுகள்
நாட்டின்
இறையாண்மையைக்
குறிக்கும்
அடையாளச்
சின்னமாதலால்
அவற்றை
மரியாதையுடன்
கையாள
வேண்டும்.
கவனமாகக்
கையாளுதல்
கணிசமான கால
அளவுக்குப்
பயன்பட
வழிவகுக்கும்.
சுத்தமான
நோட்டுகளை
நாடு
முழுவதும்
வழங்க இந்திய
ரிசர்வ்
வங்கி எல்லா
முயற்சிகளையும்
மேற்கொண்டு
வருகிறது.
அதன்
இத்தகைய
முயற்சிகளில்,
மக்கள்
தங்களது முழு
ஆதரவையும்
ஒத்துழைப்பையும்
அளிக்க
வேண்டும்
என்றும்
வேண்டுகிறது.
பிரசாத்
மேலாளர்
பத்திரிகைச்
செய்தி: 2007-2008/1186
|