மார்ச் 26, 2009
"வேற்றுமையில் ஒற்றுமை" என்ற கருத்தை அறிவுறுத்தும் வகையில்
புதிய 10 ரூபாய் நாணயங்கள் (இரு உலோகம்)
இந்திய அரசு வெளியிடும் புதிய இரு உலோக 10 ரூபாய் நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற கருத்தை மையமாக வைத்து புழக்கத்தில் விடுகிறது.
வடிவமும் வெளி விட்டமும் |
எடை |
வெளி விட்டம் உலோக விகிதம் |
மையப் பகுதி உலோக விகிதம் |
வட்டம்.
விட்டம் 27 மிமீ. (இரு உலோக) |
7.71 கிராம்
(வெளி வளையம: 4.45 கிராம்,
மையப் பகுதி 3.26 கிராம்) |
அலுமினியம் வெங்கலம்
செம்பு 92%
அலுமினியம் 6%
நிக்கல் 2% |
குப்ரோ நிக்கல்
செம்பு 75%
நிக்கல் 25% |
வடிவம்:
முன்புறம்: நாணயத்தின் முகம் இரண்டு குறுக்குக் கோடுகளால் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். அதில் மையப் பகுதியில் அசோகா தூணின் சிங்க முகமும் அதற்குக் கீழ் ‘சத்யமேவ ஜயதே’ என்ற வாசகம் இந்தியிலும் மற்றும் சர்வதேச எண்ணில் 10 என்ற மதிப்பிலக்கம் நன்கு தெரியும்படி பொறிக்கப்பட்டிருக்கும்.
இதன் மேற்புறம் ‘பாரத்’ என்ற இந்தி மற்றும் ‘இந்தியா’ என்ற ஆங்கில வார்த்தைகளைக் கொண்டிருக்கும். கீழ் புறத்தில் ஆண்டு சர்வதேச எண்ணில் குறிக்கப்பட்டிருக்கும்.
பின்புறம்: "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற நமது நாட்டின் கருப்பொருளை எடுக்க்காட்டும் இக்கருத்தை நவீன முறையில் சித்திரமாக்கிக் காட்டும் அமைப்பு நாணயத்தின் இந்த முகத்தில் உள்ளது. இதன் அடையாளமாக ஒரே உடலில் நான்கு தலைகள் இருக்கும் அமைப்பு வரையப்பட்டுள்ளது. நாட்டின் நாலா பக்கங்களிலிருந்தும் வரும் மக்கள் ஒன்றாக ஒரு குடையின் கீழ், ஒரே நாட்டு மக்களாக உணர்வதாக இதைக் கருதலாம். நாணயத்தின் மதிப்பிலக்கதை பயன்படுத்த்துபவர் உணர்ந்து, விரைவில் புரிந்து கொள்ள இத்தகு சித்திரக் குறியீடு உதவிடும். மேற்சுற்றுப்புறத்தின் இடப் பக்கத்தில் ‘தஸ் ருபயே’ என்று இந்தியிலும் ‘பத்து ரூபாய்’ என்று ஆங்கிலத்திலும் வார்த்தைகள் இருக்கும்.
1906ஆம் வருடத்திய நாணயச் சட்டத்தின்படி இந்த புதிய பத்து ரூபாய் நாணயம் சட்டப்படி செல்லத்தக்கது.
அஜித் பிரசாத்
மேலாளர்
பத்திரிகை வெளியீடு: 2008-2009/1594
|