Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (83.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 26/03/2009
"தகவல் தொழில்நுட்பமும் தொடர்பும்" என்ற கருத்தை அறிவுறுத்தும் வகையில் புதிய 10 ரூபாய் நாணயங்கள் (இரு உலோகம்)

மார்ச் 26, 2009

"தகவல் தொழில்நுட்பமும் தொடர்பும்" என்ற கருத்தை அறிவுறுத்தும் வகையில் புதிய 10 ரூபாய் நாணயங்கள் (இரு உலோகம்)

இந்திய அரசு வெளியிடும் புதிய இரு உலோக 10 ரூபாய் நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி  "தகவல் தொழில்நுட்பமும் தொடர்பும்" என்ற கருத்தை மையமாக வைத்து புழக்கத்தில் விடுகிறது.

வடிவமும் வெளி விட்டமும்

எடை

வெளி விட்டம் உலோக விகிதம்

மையப் பகுதி உலோக விகிதம்

வட்டம்.
விட்டம் 27 மிமீ. (இரு உலோக)

7.71 கிராம்
(வெளி வளையம: 4.45 கிராம்,
மையப் பகுதி 3.26 கிராம்)

அலுமினியம் வெங்கலம்
செம்பு       92%
அலுமினியம் 6%

நிக்கல்       2%

குப்ரோ நிக்கல்
செம்பு    75%

நிக்கல்   25%

வடிவம்:

முன்புறம்:  நாணயத்தின் முகம் இரண்டு குறுக்குக் கோடுகளால் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும்.  அதில் மையப் பகுதியில் அசோகா தூணின் சிங்க முகமும் அதற்குக் கீழ் ‘சத்யமேவ ஜயதே’ என்ற வாசகம் இந்தியிலும் பொறிக்கப்பட்டிருக்கும்.

இதன் மேற்புறம் ‘பாரத்’ என்ற இந்தி மற்றும் ‘இந்தியா’ என்ற ஆங்கில வார்த்தைகளைக் கொண்டிருக்கும்.  கீழ் புறத்தில் ஆண்டு சர்வதேச எண்ணில் குறிக்கப்பட்டிருக்கும்.

பின்புறம்:  நாணயத்தின் மேல் சுற்றுப்புறத்தில், வெளிப்புறமாகப் பரவிடும் கதிர் போன்ற அமைப்பு வளர்ச்சியையும் தொடர்பையும் காட்டுகிறது.   மையப்பகுதியில் மதிப்பிலக்கம் 10 சர்வதேச எண்ணில் குறிக்கப்பட்டிருக்கும்.  கீழ் புறத்தில் ‘ருபயே’ என்று இந்தியிலும் ‘ரூபாய்’ என்று ஆங்கிலத்திலும் இருக்கும். 

1906ஆம் வருடத்திய நாணயச் சட்டத்தின்படி இந்த புதிய பத்து ரூபாய் நாணயம் சட்டப்படி செல்லத்தக்கது.

 

அஜித் பிரசாத்
 மேலாளர்

பத்திரிகை வெளியீடு : 2008-2009/1593

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்