நவம்பர் 12, 2007
150 ஆண்டையும் மற்றும் முதல் சுதந்திரப் போரையும் நினைவுகூறும் வகையில் புதிய குப்ரோ-நிக்கல் 5 ரூபாய் நாணயங்கள்
150 ஆண்டையும் மற்றும் முதல் சுதந்திரப் போரையும் நினைவுகூறும் வகையில் இந்திய அரசு வெளியிடும் புதிய குப்ரோ-நிக்கல் 5 ரூபாய் நாணயங்களை, இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விடுகிறது. அந்த நாணயங்கள் பின்வரும் அம்சங்களைக் கொண்டிருக்கும்.
நாணயத்தின் மதிப்பு |
வடிவம் / விட்டம் |
எடை |
உலோக விகிதம் |
ஐந்து ரூபாய் |
வட்டம்.
விட்டம் 23மிமீ. பாதுகாப்பு விளிம்புகளுடன் |
9 கிராம் |
குப்ரோ – நிக்கல்
காப்பர் 75%
நிக்கல் 25% |
வடிவம்:
முன்புறம்: அசோகா தூணின் சிங்க முகமும் அதற்குக் கீழ் ‘सत्यमेव जयते’ என்ற வாசகம் இந்தியிலும் பொறிக்கப்பட்டிருக்கும். இடது மேற்புறத்தில் ‘भारत’ என்று இந்தியிலும் வலது மேற்புறத்தில் ‘INDIA’ என்று ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும். மேலும் நாணயத்தின் மதிப்பு இலக்கம் ‘5’ என்பது சர்வதேச எண் அளவில் சிங்கமுகத்திற்கு கீழ் பொறிக்கப்பட்டிருக்கும். இடது கீழ் புறத்தில் ‘रुपये’ என்று இந்தியிலும் வலது கீழ்புறத்தில் ‘Rupees’ என்று ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும்.
பின்புறம்: நாணயத்தின் முகப்பில் இடதுபுறம் ஜெனரல் தாந்தியா தோப் என்பவரின் படமும் வலதுபுறம் சக்கரவர்த்தி பஹதூர் ஷா II இன் படமும் பொறிக்கப்பட்டிருக்கும். நடுவில் போர்க்களத்தில் வீராங்கனை ஜான்சிராணி இலக்குமிபாயின் படமும் பொறிக்கப்பட்டிருக்கும். இடது புறத்தில்"प्रथम स्वतंत्रता संग्राम" மற்றும் "150 वर्ष" என்றும் இந்தியில் பொறிக்கப்பட்டிருக்கும். வலது புறத்தில் "THE FIRST WAR OF INDEPENDENCE" மற்றும் "150 YEARS" என்று ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டிருக்கும். காலம் 1857-2007 கீழே எழுதப்பட்டிருக்கும்.
பாதுகாப்பு விளிம்புகள்:
நாணயத்தின் விளிம்பு சுற்று வட்டத்தில் நேரான ரம்பப்பல் போன்று வெட்டபட்டதுமான பாதுகாப்பு விளிம்பாக இருக்கும். இரண்டு பகுதிகளுக்குமிடையே விளிம்பின் மத்தியில் அலங்கரிக்கப்பட்ட மேலீடான வரித்தடம் இருக்கும். அலங்கரிக்கப்பட்ட முத்துமாலையில் ஒவ்வொரு முத்துக்குமிடையில் சாய்வுக்கோடுகள் புலப்படும். மொத்தம் 30 முத்துகளும் 30 கோடுகளும் இருக்கும்.
1906ஆம் வருடத்திய நாணயச் சட்டத்தின்படி இந்த நாணயம் சட்டப்படி செல்லத்தக்கது. ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் ஐந்து ரூபாய் நாணயங்களும் செல்லத்தக்கவையே.
G. ரகுராஜ்
துணைப் பொது மேலாளர்
பத்திரிகை வெளியீடு: 2007-2008/652
|