டிசம்பர் 7, 2007
அந்நியச் செலாவணி நிதியங்களை எளிதாக அனுப்பிட போலியான விளம்பரங்கள்
விஷயத்தில் கவனமாக இருக்கும்படி
பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
ரிசர்வ் வங்கிக்கும் மற்றும் இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கும் சில வெளிநாட்டு அமைப்புகள் பணம்/நிதி அனுப்பியுள்ளதாகக் கூறும் போலியான விளம்பரங்களுக்கு இரையாக வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது. தெரியாத அமைப்புகளிடமிருந்து வரும் இத்தகைய திட்டங்கள்/அளிப்புகளில் கலந்து கொள்ள பொதுமக்கள் பணம் எதுவும் அனுப்பக்கூடாது.
சில வெளிநாட்டு அமைப்புகள்/தனிப்பட்டவர்கள், இந்தியாவில் குடியிருந்து கொண்டே அத்தகைய அமைப்புகளுக்கு பிரதிநிதியாகச் செயல்படுவோர், வெளிநாட்டுப் பணத்தில் பெருந்தொகை உள்ளதாகவும், இந்தியாவில் உள்ள தனிப்பட்டவர்கள்/அமைப்புகள் (பள்ளிகள், மருத்துவமணைகள்) ஆகியோர்களது வியாபாரம்/பணிகளுக்கு கொடுத்து உதவுவதாக கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டு விளம்பரம் செய்கின்றனர். இந்த தொடர்பு கிடைத்தவுடன் தொடக்க நிலை வைப்பு/தரகு அனுப்பிவைத்திட ஏதுவாக இருக்கும்பொருட்டு தனியார்/இந்திய அமைப்புகளின் வங்கிக் கணக்குகளின் விவரங்கள் கேட்கப்படுகின்றன. இதே போன்று, சமீப காலமாக ரிசர்வ் வங்கிக்கு தனிப்பட்டவர்கள்/ அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடமிருந்து, வெளிநாட்டு லாட்டரிப் பரிசுத் திட்டத்தில் கிடைத்த பரிசைப் பெற தரகு/ கட்டணமாக வெளிநாட்டுப் பணம் செலுத்துவது பற்றி ஒப்புதலும்/ விளக்கமும் கேட்கும் குறிப்புரைகளும் வருகின்றன. சில வெளிநாட்டு அமைப்புகள் இந்தியாவில் உள்ள தனிப்பட்டவர்கள்/நிறுவனங்கள்/ அறக்கட்டளைகள் ஆகியோர்களுக்கு குறைந்த வட்டிக்கு பெருந்தொகை கடனாக வினியோகம் செய்ய ரிசர்வ் வங்கியில் நிதி கொடுத்து வைக்கப்பட்டிருக்கிறதாகவும், ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்த பிறகு அந்த தொகை விடுவிக்கப்படும் என்றும் சில வெளி நாட்டு அமைப்புகள் ஒரு செய்தியைப் பரப்புகின்றன எனவும், அவர்களது கருத்தை வலியுறுத்தும்விதமாக ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டது போன்ற வைப்பு ரசீதுகள்/ சான்றிதழ்களை அவர்கள் ஆதாரமாகக் காட்டுகின்றனர் என்கின்ற இந்த தகவல் ரிசர்வ் வங்கிக்கு கிடைத்துள்ளது.
அந்நியச் செலாவணி நிர்வாகச் சட்டம் 1999ன்கீழ், பரிசுத் திட்டங்களில் கலந்து கொண்டு பணம் அனுப்புவது என்பது தடைசெய்யப்பட்டதாகும் என்பதை ரிசர்வ் வங்கி இன்று தெளிவு படுத்தியுள்ளது. மேலும் பரிசுத்திட்டம் போன்று வேறு பெயர்களில் செயல்படும் திட்டங்கள், அதாவது பண சுழற்சி திட்டம் அல்லது பரிசு/விருதுகளைப் பெரும் நோக்கில் பணம் அனுப்புவது போன்றவற்றிற்கும் இத்தகைய தடை பொருந்தும். இந்தியாவில் உள்ள தனிப்பட்டவர்கள்/ நிறுவனங்கள்/ அறக்கட்டளைகள் பெயரில் எந்தக் கணக்கும் ரிசர்வ் வங்கியால் பராமரிக்கப்படவில்லை, எந்த தொகையும் வினியோகத்திற்காக வைத்திருக்கப்படவில்லை எனவும் ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்துகிறது.
ஆர். ரகுராஜ்
துணைப் பொது மேலாளர்
பத்திரிகை வெளியீடு:2007-2008/770
|