Note : To obtain an aligned printout please download the (123.00 kb ) version to your machine and then use respective software to print the story. |
Date: 16/11/2016 | குறிப்பிட்ட வங்கி நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டன – தினசரி அறிக்கை அளித்தல் |
அறிவிப்பு எண் 136
Ref.No.DCM(Plg) 1291/10.27.00/2016-17
நவம்பர் 16, 2016
தலைவர் / நிர்வாக இயக்குநர் /
தலைமை நிர்வாக அதிகாரி
பொதுத்துறை வங்கிகள் / தனியார் துறை வங்கிகள் /
வெளிநாட்டு வங்கிகள் / பிராந்திய கிராமப்புற வங்கிகள் /
நகரக் கூட்டுறவு வங்கிகள் / மாநில கூட்டுறவு வங்கிகள் /
அன்புடையீர்
குறிப்பிட்ட வங்கி நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டன – தினசரி அறிக்கை அளித்தல்
நவம்பர் 08, 2016 தேதியிட்ட மேற்குறிப்பிட்ட விஷயங்குறித்த சுற்றறிக்கை DCM. (Plg) No. 1226/10.27.00/2016-17-ஐப் பார்க்கவும். இதன்படி வங்கிகள், குறிப்பிட்ட வங்கி நோட்டுகள் பற்றிய விவரங்களை தினந்தோறும் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிடவேண்டும். இந்த அறிக்கைகளை வங்கிகள் பெருமளவு தாமதமாக அனுப்பி அவற்றை ஒன்று சேர்ப்பதிலும், தொகுப்பதிலும் இந்திய ரிசர்வ் வங்கிக்கு கடும் அசௌகரியத்தைக் கொடுப்பதாக அறிகிறோம்.
2. எனவே, வங்கிகள் தினந்தோறும் கேட்கப்பட்ட புள்ளி விவரங்களை இணைப்பு 6A-ல் 23.00 மணிக்குள் முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி, பணத்தாள் மேலாண்மைத் துறை, மைய அலுவலகம் என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்திடவேண்டும்.
இங்ஙனம்
(சுமன் ராய்)
பொதுமேலாளர் |
|
|
|