டிசம்பர் 8,2003
வெளிநாட்டில்
வாழும்
இந்திய
மாணவர்களின்
குடியிருப்புத்
தகுதி
மாற்றியமைக்கப்பட்ட
நிலைப்பாடு
வெளிநாட்டில்
படிக்கும்
இந்திய
மாணவர்களிடமிருந்து
தங்களை FEMA அடிப்படையில்
வேற்றிடம்
வாழ்
இந்தியர்களாகப்
பாவிக்க
வேண்டுமென
இந்திய
ரிசர்வ்
வங்கி
வேண்டுகோள்களை
பெற்றுக்
கொண்டிருக்கிறது. அம்
மாணவர்களின்
விவாதத்தின்
கருப்பொருள்,
மாணவர்களாகிய
அவர்கள் உண்மையில்
இந்தியாவிலுள்ள
தங்கள்
பெற்றோரின் பண
உதவியைப்
பெரும்பாலும்
பெறுவதில்லை
அவர்களது
பெறும்பாலான
செலவினங்களுக்கு
பெற்றோர்
உதவுவதில்லை. அவர்களுக்கு
கொடுக்கப்பட்ட
அனுமதியின்
அடிப்படையில்
பணி
செய்வதோடு
நிதிப்
பரிமாற்றங்களையும்
மேற்கொள்வதால்
அவர்களது
குடியிருப்புத்
தகுதி
குறித்த
வரையரையை
மாற்றி அமைக்க
வேண்டுமெனக்
கோரிக்கை
வைத்தனர்.
FEMA அடிப்படையில்
இந்தியாவில்
வாழ்வோர்
என்பதற்கான
இலக்கணத்தைக்
கருத்திச்கொண்டு
அயல்நாட்டில்
படிக்கும் மாணவர்கள்
நிரந்தரமாக
அங்கேயே
தங்கிவிட இயலாது;
ஆனால்
அவர்கள்
படிப்பு
நிமித்தம்
அங்கு
தங்கும்
காலத்தை
உறுதியாகத்
கூற இயலாத நிலையையும்
ஏற்றுக்
கொண்டு FEMA நோக்கில்
அவர்களையும்
வேற்றிடம்
வாழ் இந்தியராகக்
கருதலாம் என
முடிவு
செய்யப்பட்டது.
அந்நிலையில்
மாணவர்கள்
எவ்வாறாயினும்
இந்தியாவிலிருந்து
பணம்
பெறுவதைக்
கீழ்க்கண்டவாறு
அனுமதிக்கலாம் (i) அவர்களது
படிப்பு
தொடர்பாக
அளிக்கப்படும் தொகையையும்
சேர்த்து
அவர்களது
பராமரிப்பிற்காக
தனது-உறுதிமொழியின்
அடிப்படையில்
தனது
நெருங்கிய
உறவினர்களிடமிருந்து
ஆண்டுக்கு
யூஎஸ் டாலர் 100000 வரை பெறலாம் (ii) இந்தியாவில்
ad உடன்
அவர்களது
கணக்கிலிருந்து
யூஎஸ்
டாலர் 100000 வரை (iii) FEMA
அடிப்படையில்
வேற்றிடம்
வாழ்வோருக்குக்
கொடுக்கப்படும்
எல்லா
வசதிகளும் (iv) மாணவர்களுக்கான
கல்வி
மற்றும் இதர
கடன்களா
அவர்கள்
(இந்தியாவில்
வாழ்வோரக
இருந்து)
பெற்றிருந்தால்
அவை
தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
மாணவர்களுக்குக்
கல்விக்
கடமையைத்
தொடர்வதற்காக
வழங்கப்படும்
அந்நியச்
செலாவணி வழங்களை
பயன்படுத்துவதை
இந்நெறிமுறைக்
கட்டளைகள்
குறைக்கமாட்டா.
செய்தி
வெளியீடு 2003-2004/710
அஜித்
பிரசாத்
மேலாளர்
|