2005-ற்கு முன்பு வெளியிடப்பட்ட வங்கி நோட்டுகளைத்
திரும்பப் பெறுதல் - இந்திய ரிசர்வ் வங்கியின் விளக்கம்
மேற்கண்ட தலைப்பில் 22.01.2014 தேதியிட்ட பத்திரிகை வெளியீட்டைத் தொடர்ந்து எழுந்த கேள்விகளுக்கு, இந்திய ரிசர்வ் வங்கி கீழ்க்கண்ட விளக்கத்தை அளிக்கிறது. சந்தையிலிருந்து,
2005-க்கு முந்தைய நோட்டுகளைத் திரும்பப் பெறுவதன் பின்னணி, 2005-ற்குப் பிறகு அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளைவிட அவற்றில் குறைவான பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதனால் ஆகும். மேலும், பழைய வரிசை நோட்டுகளைத் திரும்பப் பெறுவது என்பது வழக்கமான சர்வதேச நடைமுறையாகும்.
இந்திய ரிசர்வ் வங்கி, ஏற்கனவே இத்தகைய வங்கி நோட்டுகளை சீரான முறையில் வங்கிகள் மூலமாக சந்தையிலிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் கருத்துப்படி, இன்னமும் புழக்கத்திலிருக்கும் 2005-க்கு முன் அச்சடிக்கப்பட்ட வங்கி நோட்டுகளின் எண்ணிக்கை, பொதுமக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு இல்லை.
எனினும், பொதுமக்கள் தங்களது வசதிப்படி வங்கிக் கிளைகளில் நோட்டுகளை மாற்றிக் கொள்ளும் நடைமுறையைத் தொடங்கிடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், ஜூலை, 2014-லிருந்து, பொதுமக்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிக் கிளைகளில், எவ்வளவு பழைய வரிசை நோட்டுகள் வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.
இந்திய ரிசர்வ் வங்கி பழைய வரிசை நோட்டுகள் திரும்பப்பெறப்படும். நடைமுறையை, தொடர்ந்து கண்காணித்தும் மறுசீராய்வும் செய்து பொதுமக்களுக்கு இடையூறு இன்றி பார்த்துக்கொள்ளும்.
மேற்கண்ட விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், 2005 - க்கு முன்பு அச்சடிக்கப்பட்ட நோட்டுகள் தொடர்ந்து சட்டப்படி செல்லத்தக்கவையே என்று இந்திய ரிசர்வ் வங்கி வலியுறுத்துகிறது.
அல்பனா கில்லாவாலா
பிரதான தலைமைப் பொதுமேலாளர்
பத்திரிகை வெளியீடு: 2013-2014/1491 |