இந்தியாவில்
குடியிருப்போரின்
அந்நியச்
செலாவணி
நடவடிக்கைகள்
பற்றி
இப்போதுள்ள
சட்டங்களிலும்
விதிமுறைகளிலும்
தளர்வு
செய்யும்
வகையிலும்
செயல்முறைகளை
எளிமைப்படுத்தும்
நோக்கிலும், ரிசர்வ்
வங்கி
நடவடிக்கைகளை
எடுத்து
வருகிறது.
வாங்கும்
கடனுக்கு
வட்டியில்லாமலும்,
ஏழு
ஆண்டுகளுக்கு
முன்னர்
திருப்பிச்
செலுத்த
வேண்டாத
நிலையிலும்
இருப்பின், வெளிநாட்டிலுள்ள
தங்களது
நெருங்கிய
உறவினர்களிடமிருந்து
அமெரிக்க
டாலர் 250,000
வரை கடன்
பெறுவதற்கு
இப்போதுள்ள
விதிமுறைகள்
பொது அனுமதி
வழங்கியுள்ளது.
ரிசர்வ்
வங்கியால்
பெறப்பட்ட
வேண்டுகோளின்படி
அந்தக் கடனைத்
திருப்பிச்
செலுத்துவதற்குரிய
காலத்தினை
ஓராண்டாகக்
குறைக்க
முடிவு
செய்யப்பட்டுள்ளது.
அதன்படி
இந்தியாவில்
குடியிருப்போர்
வெளிநாட்டில்
உள்ள தங்கள்
நெருங்கிய
உறவினர்களிடமிருந்து
250,000 அமெரிக்க
டாலர்வரை
வட்டியில்லாமலும்
ஓராண்டுக்குப்
பின்னர்
திருப்பிச்
செலுத்தும்
வகையிலும்
கடனாகப்
பெறமுடியும்.
அந்நியச்
செலாவணி
நிர்வாகச்
சட்டம் (FEMA)
1999இன்படி
இப்போதுள்ள
சட்டங்கள்/விதிமுறைகளில்
திருத்தம்
செய்யப்பட்டு
அறிவிப்பு
வெளியிடப்
படும்வரை
ரிசர்வ்
வங்கியின்
வட்டார
அலுவலகங்கள், இது
தொடர்பாக
பெறப்பட்ட
விண்ணப்பங்களை
விரைந்து
பரிசீலிக்கும்.
அல்பனா
கில்லாவாலா
பொது
மேலாளர்
பத்திரிகை
வெளியீடு-2002-2003/266
|