இந்திய
ரிசர்வ் வங்கி,
அக்டோபர் 30, 2000
நாளிட்ட எண் 19
சுற்றறிக்கை AD
(DIR தொடரின்)
பத்தி
மூன்றில் கடன்
அட்டைகள்,
தானியங்கி
பணம் வழங்கும்
இயந்திர
அட்டைகள்,
பற்று
அட்டைகள் இவை
யாவும் பணம்
செலுத்துதலின்
வெவ்வேறு
வழிமுறைகள்
எனக்குறிப்பிட்டுள்ளதால்,
இவற்றுக்கும்,
அந்நியச்
செலாவணி
நிர்வாகச்
சட்டத்தின், 1999 (FEMA)
கீழ்
வழங்கப்பட்டுள்ள
விதிகள்,
ஒழுங்கு
முறைகள்
மற்றும்
அறிவுறுத்தல்கள்
அனைத்தும்
பொருந்தும்.
பன்னாட்டுக்
கடன் அட்டைகளை
இணையதளத்தில்
பயன்படுத்த
அனுமதிக்கப்பட்ட
வழிகளைத்
தெளிவுறுத்தும்
நோக்கில்
கீழ்க்கண்ட
தகவல்கள்
வழங்கப்படுகின்றன:
(i) அந்நியச்
செலாவணியை
இந்தியாவிலுள்ள
அங்கீகரிக்கப்பட்ட
வணிகரிடம்
பெற்றால்,
பன்னாட்டுக்
கடன் அட்டைகள்
இணைய தளத்தில்
எந்த
நோக்கத்துக்கும்
பயன்படுத்தப்படலாம்.
எடுத்துக்காட்டாக
புத்தகங்களை
இறக்குமதி
செய்தல்,
இறக்குமதி
செய்ய
அனுமதிக்கப்பட்ட
மென்பொருளை
வாங்குதல்
அல்லது
ஏற்றுமதி
இறக்குமதிக்
கொள்கையில்
அனுமதிக்கப்பட்ட
எந்தப்
பொருளையும்
இறக்குமதி
செய்தல்
(ii) தடை
செய்யப்பட்ட
பொருள்களை
வாங்குதல்,
லாட்டரிச்
சீட்டுகளை
வாங்குதல்
போன்றவை, தடை
செய்யப்பட்ட
அல்லது
விலக்கி
வைக்கப்பட்ட
புத்தகங்களை
வாங்குதல்,
சூதாட்டங்களில்
பங்குபெறல்,
பணத்தைத்
திரும்பப்பெறுவதற்கான
சேவைக்கட்டணம்
செலுத்துதல்
போன்றவற்றிற்குப்
பயனபடுத்தக்
கூடாது.
ஏனெனில்
இத்தகைய
பொருட்களுக்கு/செயல்களுக்கு
அந்நியச்
செலாவணியைப்
பெறுதல்
அனுமதிக்கப்படவில்லை
(iii)
பன்னாட்டுக்
கடன் அட்டைகளை,
இணையதளத்தில்
பயன்படுத்துவதற்கு
மொத்த
பணத்தொகை
வரம்பு
எதுவும் தனியே
வரையறுக்கப்படவில்லை.
பற்று
அட்டை மற்றும்,
தானியங்கி
பணம் வழங்கும்
இயந்திர அட்டை
ஆகியன,
அங்கீகரிக்கப்பட்ட
வணிகரிடம்
இருந்து
வெளிநாட்டுச்
செலாவணி
வாங்குவதற்குப்
பயன்படுத்தப்படலாம்
என்பது மேலும்
தெளிவுபடுத்தப்படுகிறது.
அங்கீகரிக்கப்பட்ட
வணிகர்கள்
இந்தியாவுக்கு
வெளியில்
செய்யும்
ஏற்றுமதிகளுக்கு
கடன்
அட்டைகளில்
பற்று
எழுதுவதன்
மூலம் பணம்
செலுத்துவதை
அனுமதிக்கலாம்.
இந்த
நோக்கத்துக்கான
வழிமுறைகள்
ரிசர்வ்
வங்கியினால்
தனியே
வெளியிடப்பட்டுள்ளன.
அஜித்
பிரசாத்
மேலாளர்
பத்திரிகை
வெளியீடு-2001-2002/1392
|