அக்டோபர் 17, 2015
இந்திய ரிசர்வ் வங்கி உப அலுவலகத்தை இம்பாலில் திறந்துள்ளது
அக்டோபர் 17, 2015 அன்று, இந்திய ரிசர்வ் வங்கி தனது உப அலுவலகத்தை இம்பாலில் திறந்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தின் முதல் அமைச்சர் திரு.ஓ.இபோபி சிங் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுனர் திரு. ஹாருன் ஆர்.கான் ஆகியோர், இந்திய ரிசர்வ் வங்கியின் உப அலுவலகத்தை இம்பாலில் தொடங்கி வைத்தனர். இந்த உப அலுவலகத்தின் தொடர்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
அஞ்சல் முகவரி: -
பொது மேலாளர் (பொறுப்பு அதிகாரி)
இந்திய ரிசர்வ் வங்கி
சேர்மன் பங்களா (ஹில் ஏரியா கமிட்டி)
ஆப்போசிட் அசெம்பிளி
சிங்மெய்ராங்க்
லீலாசிங் கொங்கனாங்கோங்க்
இம்பால் 795001
மணிப்பூர்
தொடர்புக்கு: -
திரு. T. ஹாவசெல், பொதுமேலாளர் (பொறுப்பு அதிகாரி)
மின்னஞ்சல்
இந்திய ரிசர்வ் வங்கியின் இம்பால் அலுவலகம் நிதியியல் சேர்க்கை மற்றும் மேம்பாட்டுத்துறை, நுகர்வோர் கல்வி மற்றும் பாதுகாப்புப் பிரிவு மற்றும் சந்தை தகவல் பிரிவு ஆகியவைகளைக் கொண்டதாக இருக்கும். இம்பால் அலுவலக திறக்கப்பட்டதைத்தொடர்ந்து, ஏழு வடகிழக்கு மாநிலங்களில் ஐந்தில் தற்போது ரிசர்வ் வங்கியின் அலுவலகங்கள் உள்ளன. மாநில அரசு, நபார்டு மற்றும் வங்கிகளுடன் இணைந்து இம்பால் அலுவலகம் மாநிலத்தின் நிதியியல் மற்றும் வங்கித்துறை மேம்பாட்டிற்காக செயல்படும்.
இம்பாலில், இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய அலுவலகம் திறக்கப்பட்ட, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்முயற்சியைப் பாராட்டிய முதல் அமைச்சர், இதுவரை வங்கி வசதி பெறாத வட்டாரங்கள் விரைவில் வங்கி வசதியைப் பெறவேண்டும் என்றார். இந்திய ரிசர்வ் வங்கி, நபார்டு மற்றும் வங்கிகள் ஆகியவை மாநிலத்தின் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். கிராம கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் (RIDF – Rural Infrastructure Development Fund) வெள்ளத்தடுப்பு நடவடிக்கைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் உதவி ஆளுனர் திரு. ஹாருன் R. கான் பேசுகையில் வடகிழக்கு மாநிலங்களின் பொருளாதார மற்றும் நிதியியல் மேம்பாட்டில் இந்திய ரிசர்வ் வங்கி மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்றும் குறிப்பாக, மணிப்பூர் போன்ற சிறிய மாநிலங்கள் மீது அக்கறை கொண்டுள்ளதால், இம்பால் அலுவலகம் திறக்கப்பட்டது இந்த நோக்கத்திற்காகத்தான் என்றார். இந்திய ரிசர்வ் வங்கியின் பங்கு மற்றும் பணிகளை விவரித்த திரு. கான் அவர்கள், வடகிழக்கு மாநிலங்களின் மலைப்பாங்கான சூழலைக் கருத்தில் கொண்டு, பணம் செலுத்தும் வழிமுறைகளுக்கான தொலைநோக்கும் செயல்படுத்தப்படுகிறது என்றார். வங்கியியல் ஊடுருவல் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது பற்றியும் மற்றும் விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளர். குறிப்பாக, இயற்கை விவசாயம், பழத்தோட்ட விவசாயம், கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள், சுய உதவிக்குழுக்கள், ஒன்றிணைந்த பொறுப்புக் குழுக்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாடு ஆகியவற்றை “கிழக்கைப் பார் கொள்கை“யின் கீழ் வலியுறுத்தினார், மேலும் வங்கிக் கிளைகள் மற்றும் வர்த்தக தொடர்பாளர்களை இணையதளம் மூலம் இணைத்து வங்கிச்சேவைகளை மேம்படுத்துவதற்கு வலியுறுத்தினார்.
திருமதி தீபாலி பந்த் ஜோஷி, செயல் இயக்குனர், இந்திய ரிசர்வ் வங்கி, திரு.ஓ.நபகிஷோர் சிங், தலைமை செயலாளர், மணிப்பூர் மாநில அரசு, திரு.S.S.பாரிக், மண்டல இயக்குனர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மாநில அரசின், வர்த்தக வங்கிகளின், இந்திய ரிசர்வ் வங்கியின் முதுநிலை அதிகாரிகள் கலந்து கொண்டனர். திரு.ஹவ்செல், இம்பால் அலுவலகத்தின் பொறுப்பு அதிகாரி நன்றியுரையை நல்கினார்.
அல்பனா கில்லவாலா
முதன்மை தலைமை பொதுமேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2015-2016/937 |