மார்ச் 01, 2016
திரு. B.P. கனுங்கோ, இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய செயல் இயக்குநர்
இந்திய ரிசர்வ் வங்கியில் இன்று திரு. B.P. கனுங்கோ, புதிய செயல் இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் அந்நிய செலாவணித் துறை, அரசாங்கம் மற்றும் வங்கிகள் கணக்குத் துறை, உள் கடன் நிர்வாகத்துறை ஆகியவற்றைக் கவனிப்பார்.
செயல் இயக்குநராகப் பொறுப்பேற்பதற்கு முன் திரு. கனுங்கோ, அந்நிய செலாவணித் துறையின் பொறுப்பில் இருந்தார். அவர் முன்னதாக ஜெய்ப்பூர் மற்றும் கொல்கத்தா மண்டல அலுவலகங்களில் மண்டல இயக்குநராகவும், மத்திய பிதேசம் மற்றும் சட்டிஸ்கரில் வங்கிக் குறை தீர்ப்பாளராகவும் பணியாற்றினார்.
திரு. B.P. கனுங்கோ, ஒரு முதுகலை கலைப்பிரிவு பட்டதாரி மற்றும் CAIIB பெற்றவர். மேலும் சட்டக்கலையிலும் அவர் பட்டம் பெற்றவர்.
(அல்பனா கில்லவாலா)
முதன்மை ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2016–17/2053 |