இந்திய அரசாங்கம், ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழுவில் திரு. நடராஜன் சந்திரசேகரன், திரு. பாரத் நரோட்டம் தோஷி, திரு. சுதிர் மான்கட் ஆகியோரை இயக்குநர்களாக நியமித்தது |
மார்ச் 04, 2016
இந்திய அரசாங்கம், ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழுவில்
திரு. நடராஜன் சந்திரசேகரன், திரு. பாரத் நரோட்டம் தோஷி,
திரு. சுதிர் மான்கட் ஆகியோரை இயக்குநர்களாக நியமித்தது
இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 பிரிவு 8 உட்பிரிவு 1 (c)-ன்படி இந்திய அரசாங்கம் திரு. நடராஜன் சந்திரசேகரன், திரு. பாரத் நரோட்டம் தோஷி மற்றும் திரு. சுதிர் மான்கட் ஆகியோரை மார்ச் 04, 2016 முதல் 4 ஆண்டுகள் காலத்திற்கு அல்லது மேலும் ஆணை வரும் வரை, எது முன்னரோ அது வரை, இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய குழுவின் இயக்குநர்களாக பணியாற்ற நியமித்துள்ளது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2016–17/2093 |
|