இந்திய நிறுவனங்களில் PIS-ன் கீழ் அன்னிய முதலீட்டைக் கண்காணிப்பது – GDR / ADR / FDI / FIIs / RFPIs /NRIs / PIOs: - M/s. கோடக் மஹிந்திரா பேங்க் தடைப் பட்டியலிலிருந்து நீக்கம் |
மார்ச் 09, 2016
இந்திய நிறுவனங்களில் PIS-ன் கீழ் அன்னிய முதலீட்டைக் கண்காணிப்பது –
GDR / ADR / FDI / FIIs / RFPIs /NRIs / PIOs: -
M/s. கோடக் மஹிந்திரா பேங்க்
தடைப் பட்டியலிலிருந்து நீக்கம் -
இந்திய ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது என்னவென்றால், M/s. கோடக் மஹிந்திரா வங்கியின் போர்ட்போலியோ முதலீட்டுத் திட்டத்தின் கீழ், குளோபல் டெபாசிட்டரி ரசீதுகள் (GDR) / அமெரிக்கா டெபாசிட்டரி ரசீதுகள் (ADR) / அன்னிய நேரடி முதலீடு (FDI) / அன்னிய நிறுவன முதலீடுகள் (FIIs) / பதிவு செய்யப்பட்ட அன்னிய, போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் (RFPIs) / குடியிருப்பவர் அல்லாத இந்தியர்கள் (NRIs) / இந்திய வம்சாவளியினர் (PIOs) ஆகியவற்றின் ஒட்டு மொத்தப் பங்கு வைத்திருப்பு, நடைமுறையில் உள்ள அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் வரையறுக்கப்பட்டிருக்கும் வரம்பிற்குக் குறைவாக உள்ளது. எனவே, மேற்கண்ட வங்கியின் பங்குகளை வாங்குவதில் உள்ள கட்டுப்பாடுகள் உடனடியாக விலக்கிக் கொள்ளப்படுகின்றன.
இந்த அறிவிக்கையை ஃபெமா 2000-த்தின் கீழ் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2015–16/2126 |
|