பொதுமக்களின் பரிவர்த்தனைகளுக்கு வசதி செய்திட, ஜூலை 01, 2016 அன்று இந்திய ரிசர்வ் வங்கி வேலை செய்யும் |
ஜுன் 28, 2016
பொதுமக்களின் பரிவர்த்தனைகளுக்கு வசதி செய்திட,
ஜூலை 01, 2016 அன்று இந்திய ரிசர்வ் வங்கி வேலை செய்யும்
சந்தை பரிவர்த்தனைகள் தீர்விற்கான வசதி செய்திடவும், பொது மக்களுக்கு இடையேயான பரிவர்த்தனைகளுக்கு உதவிடவும், மறு பரிசீலனையின் அடிப்படையில், இந்திய ரிசர்வ் வங்கி 2016, ஜூலை 01-ந் தேதி பொதுமக்களுக்கான பரிமாற்றங்களைத் திறந்து வைத்திட முடிவு செய்துள்ளது. பொதுவாக, இந்திய ரிசர்வ் வங்கி அதனுடைய ஆண்டுக் கணக்கு முடிவின் காரணமாக ஜூலை 01–ம் தேதி மூடப்பட்டிருக்கும். இந்திய ரிசர்வ் வங்கியின் கணக்கு நிதியாண்டு
ஜூலையிலிருந்து ஜுன் வரை ஆகும்.
ஆண்டுப் புத்தகக் கணக்கின் முடிவு இருப்பினும், ஜூலை 01, 2016 அன்று பின்வரும் சேவைகளைப் பெறமுடியும்.
-
RTGS / NEFT, நிதிமாற்றங்கள் மற்றும் பத்திரங்களின் தீர்வு போன்ற சேவைகள் காலை 11.00 மணியிலிருந்து;
-
T+0 அடிப்படையில் உள்ள அனைத்துப் பத்திரப் பரிவர்த்தனைகளின் நிதி மற்றும் பத்திரத் தீர்வுகள் காலை 11.00 மணியிலிருந்து;
-
இந்திய ரிசர்வ் வங்கியின் லிக்விடிடி அட்ஜஸ்மெண்ட் வசதி [Liquidity adjustment facility (LAF)] / மார்ஜினல் ஸ்டேண்டிங் வசதியின் {Marginal Standing Facility (MSF)} கீழ் திருப்புவதற்காக உள்ளவைகள் அதே நாளில் காலை 11.00 மணிக்குத் தீர்வு செய்யப்படும்;
-
எல்.ஏ.எஃப் ரிபோ வின்டோ (LAF) காலை 11.30-லிருந்து பிற்பகல் 3.00 மணி வரையிலும் செயல்படும்; மற்றும்
-
14 நாட்களுக்கான டெர்ம் ரிப்போ (Term Repo) ஏல சாளரம் நண்பகல் 12.30 மணியிலிருந்து பிற்பகல் 1.00 மணி வரை செயல்படும்.
(அல்பனா கில்லவாலா)
முதன்மை ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2016–17/3028 |
|