ஜுன் 30, 2016
ஜூலை 01, 2016-லிருந்து, ரிசர்வ் வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட
அலுவலகங்களில் 2005-க்கு முந்தைய வங்கி நோட்டுகளை
மாற்றிக் கொள்ளுதல்
2005-க்கு முந்தைய வங்கி நோட்டுகளில் பெருமளவு, புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஒரு சிறு சதவீத அளவிலான நோட்டுகள் இன்னமும் புழக்கத்தில் உள்ளன என்பதை இந்திய ரிசர்வ் வங்கி கவனித்துள்ளது. எனவே, ஒரு மறு பரிசீலனையில்,ஜூலை 01, 2016-ம் தேதியிலிருந்து, 2005-க்கு முந்தைய வங்கி நோட்டுக்களை மாற்றிக்கொள்ளும் வசதி, இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ்க்கண்ட அலுவலகங்களில் மட்டுமே செய்து தரப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி தீர்மானித்துள்ளது.
அகமதாபாத், பெங்களூரு, பேலாப்பூர், போபால்,
புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, குவாஹாத்தி,
ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னௌவ், மும்பை, நாக்பூர், புது டெல்லி, பாட்னா, திருவனந்தபுரம் மற்றும் கொச்சி.
பொதுமக்கள் 2005-க்கு முந்தைய வங்கி நோட்டுகளை, இந்திய ரிசர்வ் வங்கியின் வழங்கல் துறை அலுவலகங்களிலும் மற்றும் குறிப்பிடப்பட்ட வங்கிக் கிளைகளிலும் மாற்றிக் கொள்வதற்கான கடைசி தேதியாக 2016 ஜுன் 30-ஐ இந்திய ரிசர்வ் வங்கி டிசம்பர் 2015-ல், தீர்மானித்திருந்தது..
இந்த 2005-க்கு முந்தைய வங்கி நோட்டுகள் தொடர்ந்து சட்டப் பூர்வமாக செல்லத்தக்கவையே என்பதையும் இந்திய ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
தரமான சர்வதேச நடைமுறையின்படி பல வரிசை நோட்டுகள் ஒரே நேரத்தில் புழக்கத்தில் இருக்கக் கூடாது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி, பொதுமக்களிடமிருந்து இவ்விஷயத்தில் ஒத்துழைப்பைக் கோருகிறது. மேலும் ஏற்கனவே குறிப்பிட்ட 2005-க்கு முந்தைய வங்கி நோட்டுகளை, இந்திய ரிசர்வ் வங்கியின் மேலே குறிப்பிட்ட அலுவலகங்களில் தங்களின் வசதிப்படி மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்துகிறது. இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து இவ்விஷயத்தைக் கண்காணித்து பொதுமக்களுக்கு இதனால் எந்த இடையூறும் நேராவண்ணம் இந்த செயல்முறையை மறுபரிசீலனை செய்யும்..
(அல்பனா கில்லவாலா)
முதன்மை ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2015–2016/3051
தொடர்புடைய பத்திரிக்கை வெளியீடுகள் / அறிவிக்கை |
பிப்ரவரி 11, 2016 |
2005-க்கு முந்தைய பழைய வரிசை வங்கி நோட்டுகளை திரும்பப் பெறுவது. |
டிசம்பர் 23, 2015 |
2005-க்கு முந்தைய வங்கி நோட்டுகளை ஜுன் 30, 2016 வரை மாற்றிக் கொள்ளலாம். |
ஜுன் 25, 2015 |
2005-க்கு முந்தைய வங்கி நோட்டுகளை திரும்பப் பெறும் தேதியை இந்திய ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது. |
டிசம்பர் 23, 2014 |
2005-க்கு முந்தைய வங்கி நோட்டுகளை ஜுன் 30, 2015-க்குள் உங்கள் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்திட, இந்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களை வலியுறுத்துகிறது. |
மார்ச் 03, 2014 |
2005-க்கு முந்தைய வங்கி நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான தேதியை ஜுன் 01, 2015 வரை நீட்டித்துள்ளது. |
ஜனவரி 24, 2014 |
2005-க்கு முந்தைய வங்கி நோட்டுகளை திரும்பப் பெறுதல் – இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம் |
ஜனவரி 22, 2014 |
2005-க்கு முந்தைய வங்கி நோட்டுகளை திரும்பப் பெறுதல் – இந்திய ரிசர்வ் வங்கி ஆலோசனைக்குழு |
|