ஜூலை 04, 2016
திரு. சுதர்ஷன் சென், இந்திய ரிசர்வ் வங்கியின்
புதிய செயல் இயக்குனராக பதவியேற்கிறார்
திரு. சுதர்ஷன் சென் அவர்கள் இன்று, இந்திய ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குனராக பதவியேற்றுக்கொண்டார். வங்கிகளை ஒழுங்குபடுத்தும் துறை, கூட்டுறவு வங்கிகளை ஒழுங்குபடுத்தும் துறை மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் துறை ஆகியவைகளை இவர் கவனிப்பார்.
திரு. சென் அவர்கள், ஒரு தொழில்முறை மைய வங்கியாளர், வங்கி மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறைத் துறையோடு, நீண்டகால தொடர்புடையவர். செயல் இயக்குனராக பதவியேற்பதற்கு முன், வங்கிகளை ஒழுங்குபடுத்தும் துறையில் தலைமைப் பொறுப்பில் இருந்தார். இந்திய ரிசர்வ் வங்கியின் அகமதாபாத் அலுவலகத்தின் மண்டல இயக்குனராகவும் இருந்துள்ளார்.
திரு. சுதர்ஷன் சென் அவர்கள், இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாம் பல்கலைக் கழகத்தில் சர்வதேச வங்கியியல் மற்றும் நிதியியல், வர்த்தக நிர்வாக மேலாண்மையில் (MBA) முதுகலைப்பட்டமும் பெற்றவர். டெல்லி பல்கலைக் கழகத்திலிருந்து, கணக்கில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
(அல்பனா கில்லவாலா)
முதன்மை ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2016–17/29 |